ஒரு ஊரில் நல்லதொரு நட்பு இருந்தது.
அதில் கொள்கை இல்லை. பிறரது கொள்கைக்கு மதிப்பு இல்லாது போன போது. காலம் என்னும் காற்று காத்தாடி அறுந்து போனது.
நட்போடு இருந்த போது எனது நாவின் கூரிய கோபவாளுக்கு பயந்து இருந்தவர்கள் உண்டு.
சிலர் ஒதுக்கியும் வாழ்ந்தார்கள்.
சில நேரங்களில், சில மனிதர்களிடம் என்னூள் இருந்த காளி, காலபைரவர் சம்கார மூர்த்தியாக
வெளிப்படுவதை காணலாம்.
நட்பின் தந்திரம் வேலை செய்ததை அறிந்தேன். நல்ல ஊர், நல்ல கோயில், நல்லதுக்கு நமசிவய இருக்கும் என்றேன்.
நமசிவாயம் இருந்தா கோபம் இருக்கலாமா.
ஆம் கோபம் இருக்க கூடாது. நட்பு தந்திரமாக எனதாகிய கோபத்தை அழிக்க துணிந்தது.
கோபம் கைவிட வேண்டும் என வரம் கேட்டு சத்தியம் செய்ய சொன்னது.
கோபம் எனக்கு ஓர் பொருள் அற்ற பொருள் உடைய ஆயுதம். அதை கையாளுவதில் ஓர் நேர்த்தி உண்டு.
வார்த்தை அன்பாக சொல்லில் புனைவது, பண்பாக சொல்ல முனைவது, கோபமாக வீரியமாக வினை அறுப்பது.
கோபத்திலும் தோலுரிப்பது, உறவு முடிப்பது, முத்திரை கிழிப்பது, சில நிமிடத்தில் வாழ்ந்த காலம் மறந்து போகும் சம்காரம் நடக்கும். அவர்களுக்கு தேவையற்ற உறவுகளுக்கு மௌனம் போர்த்தினால் போதும். கோபத்தில் நான் போகவில்லை என்றால் காலம் பேசும் கால காலனாக இனி திரும்பாத ஊருக்கு கூம்பு சிட்டை தந்து விடும்.
மறை முக கோபம் மன்னிக்கும் குணம். நட்போடு யாசித்தது.
கோபம் வேண்டாம் சத்தியம் செய்யலாமா. விழித்து கெண்டாள் ஆன்மீகம் என்னும்
அணிகலன் தரித்து இருப்பது. பெண் என்னும் ஆடைக்குள் தான், இந்த கோபம் என்னும்
அங்குசம். தூரியில் பல நாகஸ்திரம் உண்டு. நமசிவய வானவ அஸ்திரமும் உண்டு.
அதை தேவையின்றி பயன் படுத்து இல்லை. தேவைக்காக பத்திர படுத்தியது உண்டு.
அஸ்திரம் இல்லாது போனால் யான் நினையாது பணி.
எதிரி பலசாலி ஆகி விழ்த்தி விடுவான். பின் வந்தவன் போகிறவன் எல்லாம் நலம் விசாரிப்பான்.
போர் குணம் போதும். போராட செல்வது இல்லையே.
நமசிவய என்னும் மெய் இருந்தால், தேவை பட்டால் எதிரிக்கு அஸ்திரத்தை நாவில் பூட்டுவேன்.
இல்லை என்றால் சிறந்த நடிகனின், சிறந்த தாய் எம் பெருமான். செயலற்ற குணங்களை யானும் கலைந்து, பிறர்க்கும் பிடிக்காதவற்றை கலைந்தும் தருவேன்.
தேசத்தின் தேவை தெரியும். ஞாபக மறதி உள்ளவர்களுக்கு ஞாபகப்படுத்த பிணம் எரிக்கும்
வேல் உண்டு. பிணம் தின்னும் கழுகோடு வாழும் வரை வேல் கம்பு விச்சு அறுவா நாவில் உண்டு.
ஆன்மீகம் பாதுகாப்புக்கு ரத்தம் இன்றி யுத்தம், சத்தம் இன்றி புத்தி போர் எம் ஈசன் கரம் கேட்டு வினை முடிப்பேன். இறைவனின் தாய் யான்.
இறைவனின் சேய்.
வீட்டுக்கு நல்ல சேவகி.
உலகுக்கு நல்ல தாதி.
அனேகத்துக்கு ஐம்புலன் மருத்துவச்சி.
மடமைக்கு தூசு தட்டும் அறந்தாங்கி.
காணமல் போக யான் கோழை அல்ல. கோபப்படாது இருக்க கோமாளியும் அல்ல.
அறியாமையில் ஒளிந்து இருப்பதால் ஏமாளியும் அல்ல.
குறை போக்கும் கோமானின் 16 செல்வம் மட்டுமல்ல. உலக குயவன் தாய் என்பதை அணுவளவும் மறவேன்.
கோபம் கூட பிறந்த பாதுகாவலன். நரக பட்டிணம் கூட்டி செல்லும் நல்ல படகு. தப பலனை நீக்கும் தர்மவான் கோபம். கோப குணத்துக்கு, குறைவில்லாது மறைந்து வாழ அனுமதித்தும் ஆசி வழங்குகிறேன்.
என்னை அறிய நினைத்தமைக்கு என்னை அறிந்த அறிவிப்பு.
எந்த கோபத்துக்கும் பொறுப்பு ஏற்பேன். கோபத்தில் தன்னை இழந்தது இல்லை. தோல்விகள் சில உண்டு. அது பாசத்தால் வீழ்த்திய ரத்த துரோகம். நம்பிக்கையால் வீழ்த்தப்பட்டது.
எனது அன்பு கௌரி நாதா இது கதை அல்ல நிஜம்.
🌹🌹சிவம்மா🌹🌹