யோகியை முருக பக்தன் ஒருவன் காண வந்தான்.
சாமி நான் தீவிர முருக பக்தன் என்றான். நல்லா தான் இருந்தேன்.
முருகனுக்கு இரண்டு மனைவி. அதனால் சாமிய மாத்துன்னு என் மனைவி சொல்லுறா சாமி.
நான் மாறாது சாமி கும்பிடனும் உதவி செய்யுங்க சாமி.
அதற்கு என்னை தெளிவுபடுத்துங்கள் சாமி என்றான்.
யோகி கூறினார், டேய் மடையா இது கதை என்றாலும் யோசியடா என்றார்.
தேவேந்திரன் மகள் தெய்வயானையை திருமணம் முடித்தது வான் உலகத்தில். அது தேவலோகம்.
வள்ளியை மணம் முடித்தது பூவுலகம்.
இருவரும் பூமியில் சித்தரிக்கப்பட்ட யோகமடா என்றார்.
சாமி புரியும் படி சொல்லுங்க சாமி என்றான்.
இடகலையை வாசி இயக்கினால் அது உன்னை வானுலகமும், வடகலையை இயக்கினால் இந்த பூ உலகமும் கிட்டும் என்பார்கள்.
அதை யோகமாக செயலுக்கு கொண்டு வந்தால் இளமை மாறாது இருக்கலாம்.
காலத்தை வென்று குமரனாகும் ரகசியமே வள்ளிதேவ சேனா என்பார்கள் முருகனை.
வடகலை பிங்கலை சேர்வது தான் செந்தில். வடகலை பிங்கலை சேர்த்து இயக்க கிடைப்பது செந்திலின் நாதனாகிய தந்தை எம் பெருமான் சிவன்.
இரண்டையும் இயக்க நாதம் பிறக்கும். அதற்கு செந்தில்நாதன் என்று பெயர் வந்தது.
நம்முள் உள்ள ஆறு சக்கரங்களும் ஒரு முகமாகவும், உள் முகமாகவும் வேலை செய்வதால்
ஆறுமுகம் என்று பெயர் வந்தது.
வடகலை பிங்கலையை அசைவற்று இருந்து, இரவு பகல் பாராது இயக்கினால் செந்தில்நாதனுடைய எம்பெருமானே கிடைப்பார் என்றார்.
சாமி என்னை மன்னிச்சிடுங்க. முருகன் கூட இரண்டு பெண்டாட்டி படத்தை பார்த்த குழப்பம் சாமி.
இனி முருகனுக்கு இரண்டு பொண்டாட்டின்னு சொல்ல விடமாட்டேன் சாமி என்றான்.
🕉️சிவம்மா🕉️