குருவுக்கு ஓர் சிஷ்யன் இருந்தான். அவன் நல்லவன், ஆனால் சிந்தனையில்லாத முட்டாளாக இருந்தான்.
பூஜைக்கு என்று வாங்கி வைத்துள்ள பொருட்களை அவனுக்கு பசித்தால் உண்டு விடுவான். இறைவனுக்கானது என்ற போதும் அவனது செயல் இவ்வாறு இருந்தது. ஓர் நாள் மலை மேல் உள்ள ஈசனுக்கு பூஜை செய்ய பழம் தேவைப்பட்டது. குரு அவனிடம் விளாம்பழம் வாங்கி வர சொன்னார். அவன் வாழைப்பழம் வாங்கி வரும் போது பழத்தை தின்றுவிட்டு அதன் தோலை எடுத்து வருவான் பத்திரமாக. குரு விகல்பம் ஏதும்ம் இல்லாது இறைவனே உண்டார் என்றே இருந்து விடுவார். இன்று மலை உச்சியில் உள்ள ஈசனுக்கு பிரியமான விளாம்பழத்தை படைக்க நினைத்தார். குரு அவனிடம் எத்தனை விளாம்பழம் பரித்தாலும் அதன் ஓட்டை பத்திரமாக்க் கொண்டு வா என்றார். சீடனும் சரி என்று கூறிச் சென்றான். பரித்து வந்தவனுக்கு பசியும் வந்தது குரு விளாம்பழ ஓட்டை அல்லவா பத்திரமாக கொண்டு வர சொன்னார். அப்படியானால் ஓட்டில் தான் ஏதோ விஷயம் அடங்கி உள்ளது என்றெண்ணி விளாம்பழத்தை உடைத்து ஓட்டை தின்றவாறு மலைக்கோயில் வந்தான். பூஜைக்கு பழமும் தந்தான். பூஜை முடிந்ததும் குரு கேட்டார், பழம் எப்படி இருந்தது என்று. அவன் விட்டதடா ஆசை விளாம் பழ ஓட்டோட என்று கூறினான்.
குரு அறிந்து கொண்டார் ஓட்டு தந்திரத்தை.
🌹சிவம்மா🌹