ஒரு யோகி ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது நடுவழியில் அவருக்கு பசியும் தாகமும் வந்தது.

ஒரு மரத்தடியில் அமர்ந்து படுத்துக்கொண்டார்.

இனி என்ன செய்வது என்று கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.

இன்று இந்த காட்டில் இறைவன் நமக்கு எவ்வாறு படியளப்பார் நினைத்தவாறு படுத்து விட்டார்.

இறைவனை சிந்தித்தவர் கண் அயர அப்பொழுது சாமி சாமி என்று யாரோ அழைப்பது கேட்டது.

கண் திறந்து பார்த்தபொழுது, ஒரு விவசாயி நின்றுகொண்டிருந்தார். அவன் கைகளில் சிறிய பாத்திரத்தில் சிறிது உணவும் இருந்தது. சாமி வீட்டில் இருந்த உணவை எடுத்து வந்தேன். தங்களைப் பார்த்தால் பசி மயக்கத்தில் இருப்பது போல் தெரிகிறது. இதோ கொண்டுவந்த நீராகாரத்தை அறுந்தி கொள்ளுங்கள். பக்கத்து ஊருக்கு சிறிது தூரம் தான் உள்ளது. தங்கள் விரைவில் சென்று விடலாம் என்றார். நீங்கள் வந்த ஊருக்கு போக நெடுந்தூரம் போக வேண்டியுள்ளது என்றார்.

இந்த நீரை வாங்கிப் பருகி கொண்டார். தன்னிடமிருந்த செம்பு பட்டயத்தை அவனிடம் கொடுத்து, மன்னரிடம் கொண்டு காட்டு, உனது கஷ்டம் நீங்கும் என்று கூறிவிட்டு ஓய்வெடுக்கலானார்.

விவசாயி அந்த செப்பு பட்டயத்தை வாங்கி பையில் வைத்துக் கொண்டு ஊர் சென்று விட்டார்.

சிறிது காலம் சென்றது. மீண்டும் துறவி அவ்வழியே வந்தார். அப்பொழுது விவசாயி கோமணம் கட்டி கொண்டு, மண்வெட்டியுடன் வானத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

உடனே யோகி கேட்டார். நான் உனக்கு ஒரு சொம்பு பட்டயம் தந்தேன் அல்லவா.
அதை அரசனிடம் காட்டினாயே? என்று கேட்டார். இல்லை சாமி, அதை பத்திரமாக வைத்துள்ளேன் என்றான்.

உடனே யோகி “நாய் பெற்ற தெங்கம்பழம்” என்று விவசாயியிடம் கூறிவிட்டுச் சென்றார்.

விவசாயிக்கு அப்போது தான் புரிந்தது. உடனே பட்டயத்தை எடுத்துக் கொண்டு மன்னரிடம் ஓடினார். மன்னன் அவனைக் கண்டு வியந்தார். உடனே ஒரு பையில் தங்க நாணயங்களை விவசாயிக்கு தந்தார். மாலை மரியாதை செய்து வழி அனுப்பினார்.

விவசாயிக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது தான் மன்னர் தண்டோரா போட்டு பறை சாற்றிய வாக்கியங்கள் அவன் காதில் விழுந்தது.

மன்னனின் வினை போக்கிய துறவிக்கு, இன்று மன்னர் தன் கடனை சமர்ப்பணம் செய்து,
இனியும் செய்ய காத்திருந்தார்.

இது ஒரு சிறிய வாய்ப்பு என்றும், இனியும் பணி செய்ய காத்திருப்பதாகக் கூறினார்.

மன்னனின் வியாதியை போக்கியதால் மன்னன் தங்களுக்கு என்ன வேண்டும்? என்று துறவியிடம் கேட்கிறார்.

துறவிக்கு உன்னால் ஆவது ஒன்றும் இல்லையே என்று கூறினார்.

இருப்பினும் மன்னன் சில செம்பு பட்டங்களைக் கொடுத்து, இது தங்களுக்கு காணிக்கையாக தருகிறேன். தாங்கள் அவற்றை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று தந்தான்.

சரி கொடு, இறைவனுக்கு ஓர் உதவி. என்று பெற்று கொண்டார்.

எனக்கு உதவி செய்ய இறைவன் வருவான். அவனுக்கு உதவுவேன் என்று வாங்கிக் கொண்டார்.

துறவிக்கு உதவிய இறைவனுக்கு தந்த பட்டையம் அது.

🌹சிவம்மா🌹

Share this:
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US