கிராமத்து பெண்கள் தங்கள் நண்பர்களுடன் ஆடு மேய்க்கச் செல்கிறார்கள். ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது சில ஆடுகள் மிரண்டு ஓட என்ன என்று பார்க்கச் செல்கிறார். அங்கு ஒரு பாம்பு எதையோ ஒன்றை தின்று விழுங்கி கொண்டிருக்கிறது. அப்போது அதன் வாயில் முள் குத்தி வாயை மூடவிடாமல் படுத்து இருந்தது. பார்ப்பதற்கு மிகப்பெரியதாக இருந்த பயங்கரமான பாம்பைக் கண்டால், அது மரண விழும்பில் அவதிப்பட்டு கொடுண்டிருந்தது. ஆடு மேய்க்கச் சென்ற இரு சிறுமிகளும் அதை கண்டார்கள். என்ன செய்வதென்று புரியவில்லை ஒருத்தி முள்ளு வெட்டும் கவட்டையை எடுத்து வந்தாள்.
ஒருத்தி கவட்டையை வைத்து பாம்பின் தலையை பிடிக்க மற்றவள் பாக்கு வெட்டி வைத்து பாம்பின் வாயில் இருந்த முள்ளை வெட்டினாள்.
முகவை தலையை அழுத்தி பிடித்துக் கொண்டு வாயிலில் இருந்த முல்லை பாக்கு வெட்டியால் வெட்டி விட்டார்கள். அடுத்தவள் ஓடிவந்து ஆட்டின் பாலை பாம்பின் வாயில் பிழிந்தாள். பின்னர் மெதுவாக வாயை எடுத்தார்கள். எடுத்துவிட்டு ஓடிவந்து பாம்பு என்ன செய்கிறது, பிழைத்துக் கொண்டதா என்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் பாம்பு அசைந்தது. மெதுவாக அசைந்து தன் தலையை தூக்கியது. தலை தூக்கிய அப்பாம்பு பேசத் துவங்கியது. என் உயிரை காப்பாற்றிய தங்களுக்கு மிக்க நன்றி. தங்கள் தலைமுறை தலைமுறையாக உங்கள் ரத்த சம்பந்தமான தலைமுறைக அனைவருக்கும் பாம்பு போன்ற விஷம் கடித்தாலும் மரணமில்லை என்று வாக்கு தந்து விட்டு அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்றது. ஆனால் அதற்குப்பின் அவ்விருவரும் வீடு திரும்பினார்கள் இதை வீட்டில் கூறினால் வீட்டில் உள்ளவர்களும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒருநாள் விஷம் வாய்ந்த உணவை உண்ட இருவருக்கும் ஒன்றும் செய்யவில்லை என்று பிரமித்துப் போனார்கள். குழந்தைகள் என்றாலும் இவர்கள் கூறிய உண்மையும் அப்பாவின் தன்மையும் அறிந்து இன்றும் இயற்கையும் பேசும் என்பதை அறிந்து பெரியோர்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டார்கள். இன்றுவரை வழிவழியாக அந்த வம்சத்தில் பாம்பு விஷம் இரண்டும் அவர்களை ஒன்றும் செய்வது இல்லையே.
🌹🌹 சிவம்மா🌹🌹