ஒரு துறவியைப் பார்த்து மன்னன், நான் யார் என்பதன் விளக்கத்தை தாங்கள் கூற வேண்டும் என்று கேட்டான். இல்லை என்றால் தங்களுக்கு கசையடி தரப்படும் என்றான். நான் என்பதை அனைவரும் உணருமாறு இருக்கவேண்டும் என்று கூறினார். துறவியும் சரி என்று, முதலில் உன் குடும்பத்தில் அனைவரையும் என் முன் நிறுத்தும் என்ற உடனே மன்னனும் தன் குடும்பத்தாரை அனைவரையும் துறவி முன் நிறுத்தினார். இவர்களெல்லாம் யார் என்று துறவி கேட்டார். இவர்களெல்லாம் எனது குழந்தைகள், நான் பெற்ற செல்வங்கள் என்றான். மன்னனின் மனைவியிடம் கேட்டார், இவர் யார் என்று. அவள் என் கணவர். அடுத்து மகனிடம் கேட்டால் இது என் தந்தை. மன்னனது பேரனிடம் கேட்டார். இது எனது தாத்தா என்று. அங்குள்ள பச்சைகிளி மன்னா மன்னா மன்னா என்று அழைத்தது. மக்களிடம் இவர் யார் என்றார், இந்நாட்டு மன்னர் எங்களுக்கெல்லாம் அரசர் என்றனர். உடனே துறவி கூறினார், மன்னா இறைவன் ஒருவனே. அவனுக்குப் பல திருநாமங்கள் உண்டு. ஆனால் மூலம் என்பது ஒன்றே. தாங்களும் ஒன்றே. தாங்கள் பெற்ற அனைத்தும் தங்களது செல்வங்கள் தான். ஆனால், அவர்களெல்லாம் மன்னனாக முடியாது. அவர்களெல்லாம் உங்களது செல்வங்கள் தான் ஆனால் நீங்களாக முடியாது. அதுபோல் தான் நானும் தலைவனும் ஒருவனே. அவனிலிருந்தே இந்த செல்வங்கள் அனைத்தும் என்பதை நான் அறிந்தும், அறியாததும் தவறில்லை. ஆனால் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தால் மட்டும் போதும். நம்பிக்கையோடு இறைவனைத் தொழுதால் மட்டும் போதும், இறைவனை அடையலாம். அதற்காக நான் யார் என்பதை தேடிக்கொண்டு காலம் விரயம் செய்ய வேண்டாம். காலங்கடந்த உபவாசமும், காலங்கடந்த உபதேசமும் கைத்தடி போல் என்றார் துறவி. ஒருவரது வயோதிகத்திற்கு கைத்தடி எவ்வாறு உதவுமோ அதுபோல் தான் உபதேசங்களும். சுவாசங்கள், இளமையில் துறவு, இளமையின் தேடலும், இளமையின் முதிர்ச்சியும் நான் யார் என்பதை அறிந்து நானாக இருக்கச் செய்யும் என்று கூறிச் சென்றார்.
You May Also Like
சந்திரமௌளீஷ்வரர் பக்தனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரசியமான கதை
1699Views
சங்கில் இருந்தால் தான் தீர்த்தம் என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?
1014Views