ஓர் வழிப் போக்கன் ஒரு ஊரை விட்டு வேறொரு ஊர் போகும் வழியில் உள்ள ஒரு கல் மண்டபத்தில் இரவு தங்கினான். அங்கு ஒரு பெண் வந்தாள். அவனிடம் தன்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டாள். உடனே அவன் சம்மதித்தான். பெண் தன் கையில் இருந்த தாலியை நீட்டினாள். உடனே அவன் தாலியைக் கட்டினான். உச்சி வேளை இரவு நெருங்கியது. சிரித்து பேசிய பெண் கொஞ்சம் கொஞ்சமாக கோபமானாள். சிறிது நேரத்துக்கு எல்லாம் ஆடத் தொடங்கினாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரம் ஆன பின் அவள் அவனையும் ஆட சொன்னாள். தன் நகத்தால் அவனைப் பிராண்டினாள். ஆடிக் கொண்டே அவனையும் ஆடச் செய்து கவனித்தாள். ஆட்டத்தை நிறுத்தினால் அவள் தன் நகத்தால் பிராண்டுவாள். ஆனால் இவ்வாறு நேரம் ஓடியது. மெல்ல பகல் புலர்ந்தது. அப்பெண் உக்கிரம் குறைந்து மறைந்தும் போனாள். ஆடிய களைப்பும், அவளது நக பிராண்டலின் பயமும் கலந்து விழுந்தே விட்டான். ஊருக்கு போனவன் மீண்டும் மண்டபம் வந்தான். அங்கு தனக்கு பின் இங்கு வந்து தங்கியவரைக் கண்டான். நண்பரே என்ன ஆயிற்று என்று கேட்டான். அதற்கு அவன் கூறினான், பேய்க்கு வாழ்க்கப்பட்டா தான் தெரியும் என்றான்.
சிவம்மா