ஓர் துறவி யாசகத்துக்கு சென்ற போது, ஓர் வீட்டில் அங்கு உள்ள இல்லறத்தாள் ஓர் நாய்குட்டிக்கு பால் சாததத்தை ஊட்டிக் கொண்டு இருந்தாள். நாய்குட்டியினை தன் மடிமேல் வைத்துக் கொண்டு கொஞ்சியும், கெஞ்சியும் அன்னத்தை ஊட்டினாள். நாய்குட்டியோ முதலில் உண்ண மறுத்து பின் உண்டது. இதைக் கண்ட துறவி, வீதியில் உள்ள நாய்குட்டிக்கும், எஜமான் வீட்டு நாய்குட்டிக்கும் வித்தியாசம் அறிந்தார். அவரது மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. நாயாக பிறந்தாலும் நல்ல யோகத்துடன் பிறக்க வேண்டும் என்று நினைத்தார்.
இந்த நினைவின் பதிமானம் பிரபஞ்சத்தில் பதிவானது. இந்த பதிமானம் ஆனது துறவியின் அடுத்த பிறவிக்கு வழி வகுத்தது. மறுபிறவியில் அவர் செல்லமான நாய்குட்டியாக பிறந்து சில காலம் வாழ்ந்து மடிந்தார். இதனைக் கூற முடியாத நாய் வடிவம் தாங்கிய சொரூபத்தில் இருந்தும், தெரிந்தும் தெரிவிக்க முடியாத வடிவம் எடுத்து வந்தது தமது எண்ணத்தால் தான் என்பதை அறிந்தார். ஓர் எண்ணம் பிறப்பையும் தரும், பிறந்த பின் பிறப்பின் அறிவின் உணர்வையும் தரும். ஆனால் பிறவியில் இருந்து தப்பிக்கும் வழியை மதியோடு இருந்தால் அன்றி பெறுவது இல்லையே என்று நினைத்தார் துறவி.
🌹சிவம்மா🌹