நாம் உழைப்பதே நல்ல உணவுக்காக தான்.

தினம் ஒரு வேலையாவது செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாது சாப்பிட கூடாது.

உணவு சமைப்பது என்பது உயர்வான கை திறன். பெண் மன வெளிப்பாடு தான் மகாலட்சுமி.

சமையல் என்பது இறைவனை நினைத்து சமைப்பது. சாமியை நினைத்து நிறைந்த மனதுடன் சமைப்பது.

சாமி கும்பிடாமல் சமைக்க கூடாது.

நல்ல மனதுடன் சாப்பாடு போடுவது.

உடல் மனம் சுத்தத்தோடு சமைப்பது.

உணவை இறைவனுக்கு எடுத்து வைப்பது.

உணவை ஓர் உயிருக்கு ஓர் கவலமேனும் எடுத்து வைப்பது.

சமையல் அறையை சுத்தமாக வைத்து இருப்பது.

உணவை வீணாக்காது இருப்பது.

இருப்பதை வைத்து இல்லை என சொல்லாது சமைப்பது.

உணவை சரி சமமாக பங்கீடு செய்வது.

உணவு கெடாது பார்த்துக் கொள்வது.

சிக்கனமாக சமைப்பது.

காய் கனிகளை பக்குவமாக சமைப்பது.

சமைத்த உணவை நம் கையால் பரிமாறுவது.

கணவன் உண்ட பின் உண்ணுவது.

கணவனோடு சேர்ந்து உண்ணுவது.

கணவனுக்கு எடுத்து வைத்து விட்டு உண்ணுவது.

கணவன் உண்ணும் முன் உண்ணுவது.

கணவனுக்கு அன்போடு போட்டு பின் தானும் உண்ணுவது.

உணவு பக்குவம் மாறாமல் வைப்பது.

உணவு பக்குவம் மாறுமுன் உண்ண செய்வது.

உணவு அலட்சியமாக விட்டு வைப்பது கூடாது.

உணவை சிந்தாமல் சிதறாமல் சமைப்பது.

உணவை சத்தம் இல்லாது போடுவது.

உணவு பாத்திரம் சத்தம் இன்றி கழுவுவது.

உணவோடு பாத்திரத்தை சுத்தம் செய்ய போடுவது கூடாது.

உணவை சாக்கடையில் போட கூடாது.

உணவை கைவைத்து பரிமாறுவது கூடாது.

உணவை குழந்தைக்கு கை விரலில் ஊட்ட வேண்டும்.

காய்கறியில் உப்பு புளி சேரும் படி சமைப்பது.

உப்பு இல்லாத சமையலறை பாவம்.

உப்பு இல்லாது சமைப்பது பாவம்.

காய் சத்து மாறாது சமைப்பது.

காய் நிறம் மாறாது சமைப்பது

பச்சை நிறத்தில் சமைக்கணும் .

உணவு பரிமாறிய கையை உடுத்திய துணியில் துடைப்பது கூடாது.

சமையல் எண்ணெயை தலையில் தடவுவது கூடாது.

முகம் வாய் சுத்தம் இல்லாது சமைக்க கூடாது.

சமைக்கும் போது அவதூறு பேச கூடாது.

சமையல் அறையில் அழக்கூடாது.

சமையல் அறையில் சண்டை கூடாது.

சமைக்கும் போது திட்ட கூடாது.

தலை வாரிய பின் சமைப்பது நல்லது.

தலையை சொறிந்து விட்டு சமைப்பது கூடாது.

பொட்டு, கை வளையல் இல்லாது சமைக்க கூடாது.

பொட்டு இல்லாத யார் முகமும் பார்க்க கூடாது.

துணை இல்லா விடிலும் பொட்டு இருக்கணும்.

3 நாள் குளிக்காது சமைக்க கூடாது.

கன்னி 3 நாள் சமையல் கூடம் வரகூடாது.

தாம்பத்யத்தில் இருந்து நேராக சமைக்க போக கூடாது.

வீட்டுக்கு ஒதுக்கி வைத்தால் மசால் உப்பு தொட கூடாது.

மாலையில் தீபம் ஏற்றாத கையால் உண்ண கூடாது.

திட்டு வாங்கிய கையால் சாப்பிட கூடாது.

தீட்டுடன் உணவு பரிமாற கூடாது.

சாப்பிடும் போது கணவனை திட்ட கூடாது.

உண்ணும் போது குறை கூற கூடாது.

உண்ணும் போது பேச கூடாது.

உண்ணும் முன் தாய் தந்தை மற்றும் வீட்டு விலங்குக்கு உணவிட்ட பின் உண்ண வேண்டும்.

சமைக்கும் போது 3 வேலையை செய்யணும்..

சமைக்கும் போதே சமையல் அறை சுத்தம் செய்து கொண்டே இருக்கணும்.

முக்கியமா சமைத்ததும் உணவு சூடு பண்ண கூடாது.

உணவை கொதிக்க மட்டும் தான் வைக்கணும்.

உணவு சூடு பண்ணும் போது கரண்டியை கையில் தான் வைத்திருக்கணும்.

உணவு அடி பிடிக்க க்கூடாது.

உணவு அடி பிடித்ததை உண்ண கூடாது.

அடி பிடித்தை யாருக்கும் தர கூடாது.

அழுக்கு உடையோடு சமைக்க கூடாது.

சாமி கும்பிடாது சமைக்க கூடாது.

🕉️சிவம்மா🕉️🕉️🕉️

Share this:
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US