பேரரசன் ஒருவன் இருந்தான். அவருக்கு அருகில் ஆன்மீக மந்திரி ஒருவர் அமர்ந்திருந்தார்.
அவர் நல்ல பதவியில் இருந்தாலும் அவருக்கு யோகம் என்ற ஒன்றை தேர்வு செய்து அதை கற்க வேண்டும் என்று நினைத்தார்.
தன்னை அதில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்தது .
அதனால் மன்னரிடம் மன்னா நமது நாட்டிற்கு ஒரு குரு வந்துள்ளார். அவரிடம் சென்று தீட்சை பெற்று வருகிறேன் என்றார்.
மன்னரிடம் அனுமதி கோரினார். மன்னனும் சென்று வர உத்தரவிட்டான்.
மந்திரியும் சென்று குருவை சென்று தரிசனம் செய்து குரு தட்சணை கொடுத்து பணிந்து திட்சை பெற்று, மிக ஆனந்த பெருமிதத்துடன் மன்னனிடம் தான் பெற்ற திட்சையையும், அதன் வீர்யத்தையும், அதன் பெருமையும், எண்ணில்லா உணர்வுகளை பகிர்ந்து கொண்டான் .
பக்திக்கும் தான் பெற்ற தீட்சையின் யோகத்திற்கும் உள்ள வித்தியாசங்களை கூறினார்.
மன்னருக்கு ஒரு சிறிய ஆசை வந்தது. அம் மந்திரத்தை என்னவென்று கேட்டு விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது .
மந்திரி கூறினார், பக்தி என்பது வெளி நிலையில் உணர்வுகள் என்பதையும் யோகம் என்பது உள்நிலை உணர்வுகளையும் விவரிக்க வார்த்தை இல்லை என்பதைக் கூறினார்.
உடனே தனக்கு உபதேசிக்க வேண்டும். அந்த மந்திரத்தை கூறுமாறு கேட்டார். உடனே மந்திரி கூறினார், மன்னா அம் மந்திரத்தை எனக்கு கூற உத்தரவு கிடையாது.
அப்படியே என்றாலும் மந்திரத்தை கூறும் தகுதியும் எனக்கு இல்லை.
ஏனெனில் மந்திரம் என்பது குரு வாய்மொழியாக வாங்க வேண்டிய ஒன்று .
இறைவன் மேல் விழுந்தால் மட்டுமே தீர்த்தத்துக்கு ஆகும்.
பெருமை சங்கில் இருந்தால் தான் தீர்த்தம். நீர் நிலைகளில் இருந்தாலும் அது தீர்த்தம் ஆகாது எல்லாம்வல்ல இறைவன் மேல் நீர் விழுந்து வந்தால் தான் அது தீர்த்தம் ஆகும் .
தீர்வு தரும் என்பதை அவன் விளக்கிக் கூறினான்.
மன்னனுக்குக் கோபம் தான் வந்தது. தனக்கு மந்திரத்தை கூற சொன்னால் இத்தனை விளக்கம் தேவைதானா என்றார்.
மன்னர் இனியும் கோபத்தை அதிகமாக்கியது.
உடனே மன்னன் “நீ மந்திரத்தை கூற வில்லை என்றால் நான் உன் தலையை சிரச்சேதம் செய்து விடுவேன்” என்றார்
மன்னா மன்னிக்கவும் 10 நிமிடங்கள் அவகாசம் கொடுங்கள் உங்களுக்கு நான் இதுபற்றி விளக்கத்தைக் கூறி விடுகிறேன் என்றார்.
உடனே மன்னரிடம் ஒரு நிமிடம் தாங்கள் கீழே அரியணையில் இருந்து இறங்குங்கள் என்றார்.
அந்த அரியாசனத்தில் மன்னனாக மந்திரி அமர்ந்து
கொண்டு ‘யார் அங்கே மன்னரைக் கைது செய்யுங்கள்’ என உத்தரவிட்டார்.
உடனே அங்கிருந்த காவலர்கள் ஓடிவந்து மன்னனை இருபக்கமும் பிடித்துக் கொண்டார்கள்.
மன்னனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே மன்னிக்கும் மாண்பு மன்னிக்க வேண்டும் என்று கூறி மன்னனை விடுவித்தார்.
மன்னனை விடுவியுங்கள் என்று விடுவித்த மந்திரி கீழே இறங்கி வந்தார். அனைவரையும் விலக உத்திரவிட்டார்.
மன்னரே மந்திரியும் அரண்மனை வாயில் முதல் வாயில் கடந்து விட்டு இரண்டாம் பாதியில் படித்து வந்தார்
அங்கு சேனாதிபதியும் சேனைத் தலைவர்கள் இருந்தார்கள் அங்கு வந்ததும் மன்னா மன்னிக்கவும் என்று கூறினார் .
உடனே மந்திரி கூறினார் மன்னா அந்த அரியணைக்கு எத்தனை சக்திகள் உண்டு என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்
அதிலிருந்து சொல்லும் பொழுது தான் அந்த சக்திக்கு வலிமை அதிகம். அதுபோல்தான் குரு மூலமாக, சிவம் வாழும் குரு மூலம் வாங்கும் மந்திரங்கள் வலிமையுடையது.
அந்த அரச பீடத்தில் மன்னர்கள் எழுந்தருளும் போது எத்தனை சக்திகள் உள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள் .
அது போல தான் குரு என்னும் உடலின் பீடத்தில் சொல்லும் வார்த்தைக்கு அதன் பலமும் ஆதிக்கமும், இறை சக்தியும் உண்டு. இறை சக்தியை நீங்கள் மந்திரம் சேவி என்னும் காதல் இருந்து பெற வேண்டும்.
மந்திரம் வேண்டுமென்றால் தங்கள் சென்று ஒரு குரு மூலமே பெற்றுக்கொள்ளுங்கள் என்றார் .
காரணம் நாம் நம் குண சக்தியை வைத்தே மந்திரங்களை பயன்படுத்துவோம் .
அவர்கள் இறை சக்தியை வைத்து மந்திரங்களை தருவார்கள் என்பதை தாங்கள் அறிய வேண்டும்.
மன்னிக்க வேண்டும் என்றார் மந்திரி. மன்னனுக்கு புரிந்தது. தனது தவறை உணர்த்து இறை உணர்வை எங்கு பெற வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன் என்றார்.
குருவையும் அடைந்து இறைவனையே பற்றி வருவேன் என்று குருவை நாடி சென்றார்.
🌹🌹சிவம்மா🌹🌹