அதிகாலை எழுந்து ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதவேண்டும்.

கங்கை தண்ணீர் கொண்டு விபூதியில்
சிவ லிங்கம் செய்து இறைவனுக்கு அலங்காரம் செய்து வெற்றிலை பாக்கு, பழம், ஊதுபத்தி, பூ மற்றும் குங்குலிய வாசனையுடன் சிவபுராணம் சொல்லி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

பூஜை முடிந்ததும் விபூதியால் செய்த சிவலிங்கத்தை உதிர்த்து விபூதியை பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். இந்த விபூதியை தினமும் நெற்றியில் இட்டு வரலாம்.

உடல் நலம் சரியில்லாத வேலையில் சிவ லிங்கம் செய்த விபூதியை சிறிதளவு நீரில் இட்டு அருந்தினால் உடல் நலம் சீராகும்.

லிங்கம் செய்ய கங்கை நீர் இல்லை என்றால் மழை நீரை உபயோகிக்கலாம்.

மழை நீரில் லிங்கத்தை செய்யலாம் மழை நீர் சுத்தமான ஆகாயகங்கை ஆகும்.

சிவ பூஜையில் 108 முறை சிவனது திரு நாமம் ஆகிய ஐந்து எழுத்து மந்திரத்தை ஜெபம் செய்து வழி படவேண்டும்.

சிவ வழிபாட்டில் தினமும் செய்ய வேண்டியது மானசீக பஞ்சாட்சரம் சொல்லுவது, நம்மை தேடி வரும் இயலாதவர்களில் ஒருவருக்கேனும் ஒரு வேலையாவது உணவிடுவது அல்லது உணவை தேடி சென்று தந்து அதன் பின் நாம் உணவு உண்பது.

சிவ பூஜையின் முக்கியத்துவம் ஜீவகாருண்யத்தோடு கூடிய தான தர்மங்களே ஆகும்.

இவ்வாறு சிரத்தையோடு பூஜைசெய்யும்போது அங்கு இறைவனே எழுந்து அருள்வார், இவையே சிவ பூஜையின் பலன்கள்.

ஐந்து வகையான பூக்கள் கொண்டு சிவபூஜை செய்யலாம்.

இன்று கடைகளில் பல நிற பூக்கள் விற்க்கப்படுகிறது.

திருநீரில் சிவலிங்கம் செய்வதால் அபிஷேகம் இல்லை தீப ஆராதனை உண்டு.

அகல் விளக்கு புதியதாக வாங்கி உங்கள் விரதம் முடியும் வரை விளக்கு ஏற்றவும்.

அக ( அகம் ) என்னும் உங்கள் மனதில் விளக்கு என்னும் ஒளியை ஏற்றுங்கள்.

வாழ்வில் இருள் என்னும் மாயை விளகி
மகேசனை அடைய சிவனை போற்றுங்கள்.

தீப திருநாள் நிறைவு வரும் வரை தங்களின் சிவ பூஜையையும் விரதத்தையும் தொடருங்கள்.

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (25/08/2019) முதல் திருகார்த்திகைதீபத்திற்கான
108 நாள் விரதம் துவங்குகிறது.

துவங்கும் நாள் 25/8/2019

தீப திரு நாள் 10/12/2019

உலகில் தலை சிறந்த
வழிப்பாடு அருவ லிங்க வழிபாடே ஆகும்.

சத்குரு சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா .

Share this:

Leave a comment

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.