ஈஷ்வர பக்தன் ஒருவன் மன்னாக இருந்தான்.
அவன் ஈஸ்வரனுக்கு நேரம் தவறாது பூஜையை செய்வான்.
அடுத்து தனது நாட்டு பணி செய்வான்.
இது அவனது வாழ் நாள் லட்சியமாக தொடர்ந்து செய்து வரலானான்.
இதனால் மன்னனின் ஆட்சியில் நாடும் நாட்டு மக்களும் செழித்து காணப்பட்டது.
இதனால் இவனது நாட்டை பிடிக்க அண்டை நாட்டு மன்னர்கள் தயாரானார்கள்.
ஓவ்வொரு மன்னனும் மௌளீஷ்வர பக்தனிடம் சண்டையிட்டு தோற்று போனார்கள்.
இதனால் அண்டை நாட்டு மன்னர்கள் ஓன்று கூடி மௌளீஷ்வர பக்தனை தோல்வி தழுவ செய்து மடக்கைதி போல் பிடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள்.
அதற்கான சூழ்ச்சியை தயார் செய்தார்கள்.
மௌளிஸ்வர் பூஜை செய்யும் அந்தணனை அணுகி, அவனது பலம் பலகினத்தை அறிந்தார்கள்.
பலன் மௌளீஷ்வர் பக்தன் என்பதும்.
பலகினம் பூஜை கால நேரத்தில் எந்த ஒரு வேலையை செய்வதும் இல்லை என்பதை அறிந்தார்கள்.
அண்டை நாட்டு மன்னர்கள் அவ்வேலையை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு சந்தரமௌளீஷ்வர் பூஜையின் அதிகாலை வேலை நேரத்தில் இரவோடு இரவாக சந்திரமௌளீஷ்வர் ஊரை சுற்றி வளைத்தார்கள்.
இதை அறிந்த மந்திரி, போர் ஆயத்த படுத்துமுன் ஊர் சுற்றி இருக்கும் படையை அறிந்து, சிவ பூஜையில் இருக்கும் மன்னருக்கு தூது விட, தூதின் பதிலை சொல்ல முடியவில்லை. காரணம்
மன்னன் பூஜையில் இருந்தால்.
இச்சூழ்நிலை அறிந்த ராஜமாதா மன்னனை காண செல்கிறாள்.
போர் சூழ்நிலை தாங்கிய செய்தியை அறிந்து வருகிறாள்.
சந்திரமௌளீஸ்வருக்கு நேர்த்தியாக வைக்க பூக்களை அலங்கரித்து சிவ பூஜையை துவங்க இருந்த போது, ராஜமாதா சென்று,”மன்னா நாடு பிறர் கைபற்றி விடும் சூழ்நிலையில் உள்ளது.”
தன்னை தவிர இந்த சூழ்நிலையில் போர்க்கோலம் பூண்டு நாட்டை காக்க வேண்டியது உனது தலையாய கடமை.
பூஜையை விட்டு நாட்டை காக்க புறப்படு, இல்லை என்றால் நாமும், நமது நாடும் அடிமை பட்டு விடுவோம்.
நாட்டை காக்கும் மக்கள் பிரதிநிதியாகவும் கேட்டும், மன்னன் தாயாகவும் உத்தரவிடுகிறேன்.
எழுந்து வா என்றாள் ராஜமாதா. நாட்டை எதிரிகள் பிடிக்கும் தருவாயில் உள்ளது.
சிறு நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இருப்பதால், சூழ்நிலை மிக மோசமாக போய் கொண்டிருக்கிறது, வா மகனே என்றாள்.
சந்திரமௌளீஷ்வர் பூஜையில் இருந்த மன்னன், ராஜமாதா தாங்கள்அறியாதது ஒன்றும் இல்லை.
இருப்பினும் ஒன்றை அறிவிக்கிறேன்.
இந்த நாடும் நாட்டு மக்களை யார் தந்தரோ, அவரே இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பார். கலங்க வேண்டாம்.
தாங்கள் அமைதியாக பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.
நடப்பதை இறைவன் அறிவான். இறைவன் விருப்பம் போல் நடக்கட்டும் என்றார்.
சிவ பூஜை என்றும் போல் அமைதியாக, மிக நேர்த்தியான அலங்காரம் செய்து பூஜை ஆனந்தமாக முடித்தது..
தனது அலங்காரத்தை கண்டு கழித்தான்.
அவ்வேளையில், ராஜாதி ராஜ சந்திர மௌளீஸ்வர மன்னன் வெற்றி வெற்றி எனக் கூறிய குரல் மன்னனை நெருங்கியது.
வித்தியாசமான போர் ஆடை மற்றும் கவசம் அணிந்த இரு படை வீரர்கள் .
இருவர் எதிரி மன்னனை பிணயக்கைதி போல் பிடித்து இழுத்து வந்து மன்னன் முன் தள்ளினார்கள்.
விழுந்த மன்னன் கூறினார்.
மன்னா, என்னோடு போர் புரிந்த அந்த மாவீரனை எனக்கு ஒரு முறை காண வேண்டும்.
அதன் பின் என்னை கைதியாகவோ, தலையை சிரச்சேதம் வேண்டும் என்றாலும் செய்து கொள்ளுங்கள்.
ஆனால் ஒரு முறை அந்த மாவீரனை கண்டபின் உயிரை துரக்க விரும்புகிறேன்.
இது எனது மரணத்தின் இறுதி ஆசையாக வைத்தாவது என்னோடு போர் புரிந்த அந்த மாவீரனை யான் காண வேண்டும் என்று கூறி கதறினான்.
மன்னன் ஒன்றும் புரியவில்லை. மன்னனோடு பிடித்து வரப்பட்ட போர் வீரன் பேசினான்.
மன்னா யான் கூறுவதை செவி கொடுத்து கேட்ப்பீராக.
குறுநில மன்னர்கள் முதல் வழுதி மன்னன் தலைமையில் தங்கள் ஊரை கைபற்றி, தங்களது நகரையும் சூழ்ந்த போது, வெள்ளை குதிரையில் மீது ஓர் இளம் வீரன் எதுவும் அறியாத பாலகனாக இந்த இரு வீரர்களோடுவந்து நின்றான்.
முகத்தில் பயமின்றி புன்முறுவல் இருந்தது.
குதிரையை தன் காலால் உதைத்து அசைத்த வண்ணம், எங்களை போருக்கு அழைக்கும் பாவத்தில் சிரித்த வண்ணம் இருந்தான்.
சிறிய சேனையை வைத்து கொண்டு எவ்வாறு பெரும் படையை சந்திக்க வந்தான் என்ற கேள்வி வியப்பை தந்தது.
வந்த வீரன் சிறிதும் தாமதிக்காது, எங்கள் படையில் புகுந்து மணல் புழுதிகளை கிளப்பியவன்,
படைகளுக்குள் புகுந்து துவம்சம் செய்து வெளிவந்தான்.
எங்களது போர் களத்தேர்வு தவறோ என்று எண்ண வைத்து, எங்கள் மன்னனை மடக்கி பிடித்து மண்டி இட செய்தான்.
அவனது ஆளுமை பயம் அற்ற ஓர் உணர்வை தந்தது.
அவனது புன் சிரிப்பு மாறாது, அந்த வெள்ளை குதிரையை குதிக்கவும், கரைக்கவும் விட்டு ஒர் மிரட்சியையை உருவாக்கினான்.
அவன் மீது ஆளாகி பிரியம் வந்து, அவனது வீரர்களிடம் விட்டு விட்டு, குதிரையோடு திரும்பி
தனது கையசைவில் கைதான மன்னனை கொண்டு வா என சைகை செய்தான்.
நான் மரணிக்கும் முன் ஒரு முறை அவனை கண்டு பின் மரணிக்க உதவுங்கள்.
இது எனது ஆசை. எதோ ஒன்று என்னை கொள்கிறது.
அந்த மாவீரனை கண்டால் எனது ஜென்மம் புர்த்தியாகும் என்று எல்லாம் தோன்றியது.
ஓரே ஒரு முறை இளம் வீரனை காண வேண்டும்.
அவனது போர் செய்த விதம் எம் கண்களில் இருந்து மறைய மறுக்கிறது.
கொண்டு வா என்ற சைகையில் செய்து விட்டு போன உருவம் என்னை ஈர்க்கிறது.
மாவீரனோ பாரா முகமாக குதிரைகள் கால் புழுதி பறக்க சென்றான்.
எங்கள் மன்னன் கேட்டார் மாவீரனே. நீ எந்த நாட்டை சேர்ந்தவன் என்று வினவிய போது.
ரகுவர்மாவின் பிரியத்துக்கு உகந்த நற்சேவகன் என்று கூறியவாறு தன் குதிக்காலால் தட்டி புழுதி பறக்க குதிரையும் பறந்து மறைந்தது.
மன்னனது பாதுகாப்பு படை தலபதிகளான நாங்களும் வலிய வந்தோம்.
இளம் வீரனை கண்டு பின் இளம் போர் வீரனின் கையால் மாழ்வது என்று வந்தோம்.
இதை கேட்ட ரகுவர்மா.
யார் அங்கே, அந்த போர் வீரனை அழைத்து வாருங்கள் என்றார்.
யானும் அவனை காண ஆவலாக உள்ளேன் என்றான்.
ரகுவர்மனின் படை தளபதி, உடனே முன் ஓடிவந்து.
மன்னா, அந்த வீரனை இன்று தான் புதிதாக கண்டேன். இளம் வீரனை எங்கு தேடியும் காணாது களைத்து வந்து உள்ளேன் என்றான்.
ரகுவர்மன். இறைவா யார் அந்த வீரன்? எனது பூஜைக்கு உதவி, எனது நாட்டை பாதுகாத்து எனக்காக போர் புரிந்த வீரனை காண வேண்டும் என்று மண்டியிட்டு இரு கரம் நீட்டி கேட்க,
குதிரை சத்தம் கேட்டு, எல்லோரும் ஒரே நேரத்தில் திரும்பி பார்க்க, வெள்ளை குதிரையில் வந்த அழகிய மாவீரன் பொன் ஒளி விச, அங்கு உள்ள அனைவரையும் ஓரு சுற்று சுற்றி, குதிரை கால் தூக்க கடிவாளத்தை இழுத்து, குதிரையை கரைக்க செய்து, குதிரையின் சேனத்தில் எழுந்து அமர்ந்தவாறு.
சந்திரமௌளீஷ்வரை நோக்கி குதிரையை செலுத்த, குதிரை அங்கு எழுந்து அருளிய
சிவலிங்கத்தில் மறைந்தது.
இதை கண்ட அனைவரும் பிரமித்து மீளா ஆனந்தத்தில் நின்றார்கள்.
ரகுவர்மன், தனக்காக, தன் நாட்டுக்காக போர் செய்து வந்த சந்திரமௌளீஷ்வரரை
ஆராதழுவி, ஆனந்தத்தில் அழுதான்.
எம் ஈசன் கருணையாளன் அல்லவா. உற்ற துணைவன். ஆபத்து ரச்சகன்.
🕉️சிவம்மா🕉️