ஒரு யோகிக்கு நல்ல சிஷ்யர்கள் இருந்தார்கள். அதனால் அவர் எப்போதும் ஆனந்தமயமான அவரது உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருப்பார். இவர்களது வாழ்வு ஒரு தெய்வீக வட்டத்துக்குள்ளேயே இருந்தது .
ஒரு நாள் ஒரு கிராமவாசி வந்தான். அவன் தங்கள் ஊரில் தன் நண்பர்களோடு கஷ்டப்படுவதாக கூறினான். தனக்கு ஏதேனும் ஒரு உதவி செய்ய முடியுமா என்று கேட்டார்.
என்னவென்று சொல் என்று கேட்டார் யோகி.
தனது நண்பன் செல்வ சீமான் அவன் பணம் இருந்தும் கஷ்டப்படுகிறான்.
நான் ஏழைக் குடியானவன். குழந்தைகளால் இருவர் இருந்தும் எங்கள் வயோதிகத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்றார்.
அவரவர் கர்மவினையின் பலனையே நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் நீங்கள் உங்கள் கர்ம பலனை அனுபவித்து விட்டு செல்லுங்கள் என்றார் யோகி.
கர்மவினை எதுவென்று குடியானவனுக்கு தெரியவில்லை.
குடியானவன் தன் நண்பனுக்காகவும் கூறினார். குடியானவன் ஏன் இவ்வளவு துன்பம் என்றும், என்னவென்று கூறினால் நான் நிம்மதியாக செல்வேன் என்றான்.
எனது துன்பத்திற்கு காரணம் என்னவென்றே எனக்குத் தெரியவில்லையே நான் என்ன செய்வேன். மீண்டும் அழுதான்.
அதற்கு யோகி சொன்னார். பணம் படைத்த உன் நண்பன் பணத்தை சம்பாதித்தார். நிறைய சொத்து சுகங்களை வாங்கி வைத்தார். சொத்து சுகங்களுக்காக குழந்தைகள் சண்டையிட்டு பல துண்டுகளாக பிரிந்தது. அவன் வாங்கி வைத்த சொத்து சுகமும் தான் காரணம்.
உடனே குடியானவன், ஐயா நான் கஷ்டப்பட்டு வீட்டில் அனைத்தையும் பொருட்கள் வாங்கி வைத்தேன். சொத்து சுகம் வாங்காது இருந்தும் நான் துன்ப படுகிறேன். இதற்கு என்ன காரணம் என்று வினவினான்.
அதற்கு யோகி சொன்னார், நீ சொத்து சுகங்களை எல்லாம் சேர்க்காவிட்டாலும், வீட்டில் கஷ்டப்பட்டு அனைத்தையும் வாங்கி வைத்தாய். ஆனால் நீ ஒன்று செய்ய மறந்து விட்டாய். வீட்டின் தேவைகளை அனைவருக்கும் பூர்த்தி செய்த நீ அன்பை கொடுக்க மறந்தாய். அன்பைக் கொடுக்க மறந்தால் இன்று நீ அன்பை பெற வில்லை.
சாமி நான் என்ன செய்வேன் என்றார்.
சரி உனக்கு நான் ஒரு மந்திரப் பொடி தருகிறேன். தினமும் பூசிக் கொள். அவர்களிடம் கோபப்படாமல், நீ உன் மனதிற்குள் ஒரு வேலைக்காரனாக வாழ்ந்து வா. சில மாதம் கழித்து என்னை காணவா என்றார்.
இந்த மந்திர பொடியை என்ன செய்யவேண்டும் என்றார் .
இந்த மந்திர பொடியை நீ எப்போதும் நெற்றியில் பூசிக் கொள்ளவேண்டும்.
கோபப்படாது நீ அனைத்து காரியங்களையும் செய்.
சரி என்று சொல்லி ஏழைக் குடியானவன் சென்றார்.
சில நாட்கள் கழித்து யோகியை காண வந்தான். அவன் கூறினான். ஐயா நீங்கள் கொடுத்த மந்திர பொடி நன்றாக வேலை செய்தது. இப்போது என்னை எல்லோரும் ஒன்றும் சொல்வதில்லை. எல்லோரும் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். மந்திர பொடி தீர்ந்தது. அதனால் தான் நான் இங்கு வந்தேன் என்றார்.
யோகிக்கு அவனது கோபம் போய்விட்டது என்று புரிந்தது. இருப்பினும் அவனுக்கு நிறைய மந்திர பொடி தந்தார். பெரிய அளவில் பொடியை கையில் கொடுத்து அனுப்பினார்.
அவன் மிக ஆனந்தமாக கூத்தாடி சென்றுவிட்டார்.
இதை பார்த்த சிஷ்யன், குருவே நம்முடைய அடுப்புச் சாம்பல் எப்போது மந்திர பொடி ஆனது என்று கேட்டான்.
என்ன செய்ய. அவனது கோபத்தை விடு என்றால் அவனால் விட முடியாது. அவனது துன்பத்திற்கு கோபமே காரணமாக இருந்தது. ஆனால் அந்த பொடியை பூசும் போது அவன் மனம் கட்டுப்பட்டது. இவ்வாறு கோபப்படாமல் நடந்தால் தான் பொடி வேலை செய்யும் என்பதையும் நினைவு கொண்டதால் அவனது மனம் மாறியது.
வேலைக்காரனின் வேலை எஜமான் இட்ட பணியை செய்வது. வேலைக்காரன் எவ்வாறு வேலையை செய்வது ஆகும்.
அதனால் தான் இறைவன் திருவடி ஆகவே நான் அதை தந்து விட்டேன் என்றார்.
ஒருவரின் நம்பிக்கையும், அவர்களின் ஒரு மாற்றமும் இவ்வுலகில் வாழ்வதற்கான வழி வகுக்கும் என்பதை சிறிது சிரித்தவாறு, மெதுவாக யோகத்திற்கான இடத்திற்கு, அவனது நம்பிக்கை தான் இறைநம்பிக்கை என்று கூறியவாறு சென்றார்.
🌹🌹சிவம்மா🌹🌹