ஒரு ஏழைக் குடியானவன் இருந்தான்.

அவன் ஒரு பாண்டித்தியம் பெற்றவரிடம் வேலை செய்து வரலானான்.

காலில் பொறந்தவனே, சொல்ற வேலைய மட்டும் செய்டா போதும் என்று அடிக்கடி சொல்லுவார்

திரும்பி பாக்காம போ. உன்னை எங்க வைக்கணுமோ, அங்க தான் உன்னை வைக்கணும்னு சொல்வார்.

அவர், எனக்கு புரியவில்லையே எஜமான், விளக்கம் தாங்க என்றான்.

ஒரு நாள், சாமி என்னை ஏன் காலில் பிறந்தேன் என்று சொல்றீங்க என கேட்டான்.

பாண்டித்தியம் பெற்றவர் கூறினார்.

நான் பிரம்மனின் தலையில் பிறந்தவன்.

பிரம்மனின் காலில் பிறந்தவன் நீ.

அதனால உன்னை எங்க வைக்க வேண்டுமோ, அங்கு தான் வைத்து பார்க்கணும் என்றார்.

இதுதாண்டா பிரம்மா சொன்னது என்றார்.

வேலைக்காரன் புரிந்து கொண்டேன் சாமி. தெரியாமல் கேட்டு விட்டேன் என்றான்.

இனி ஒரு போதும் நான் என்னுடைய இடத்தில் இருந்து உங்கள் இடத்தை கனவுல கூட நினைத்து பார்க்க மாட்டேன்.

சொல்லுங்க எஜமான் என்ன செய்யணும் என்றான்.

பாண்டித்தியம் பெற்றவர் பெருமைப்பட்டுக் கொண்டார்.

அவரது விளக்கத்தைக் கேட்ட ஏழைக் குடியானவன் சரியாக தன் வேலையை மட்டும் செய்து வரலானான்.

ஆனால் எப்போதும் பாண்டித்தியம் பெற்றவர், காலில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என்று கூறிக் கொண்டே இருப்பார். அதையும் பெருமையாக ஏற்றுக்கொள்வான் குடியானவன்.

ஒரு நாள் பாண்டிதர் இறந்தார்.

அவரை கொல்வை புறமாக வெளியில் கொண்டு போட்டனர்.

பண்டிதரை தூக்கி செல்ல காலில் பிறந்தவர்களை அழைத்து வந்தான்.

பிணத்தை தூக்குங்க என்றார்கள் உறவினர்கள். காலில் பிறந்தவர்கள் ஓடிவந்தார்கள்.

பெற்ற பிள்ளை உறவினர்கள் அவரை விட்டு விட்டு விலகி ஓடினார்கள்.

வேலை காரனுக்கு ஒன்றும் புரிய வில்லை.

எசமான் இங்கு என்ன நடக்குது என்று எனக்கு தெரியவில்லை.

ஓடிச்சென்று அங்கிருப்பவர்கள் எல்லாம் கூப்பிட்டு அழைத்தான்.

அழுதான். தலையில் பிறந்தவர் தரையில் கிடக்கிறார் என்று கத்தினான்.

எத்தனை படிச்சவர், எத்தனை பேர் மதிச்சவர், எத்தனை புகழ் கிடைச்சவர். எத்தனை பிள்ளையை பெத்தவர். எத்தனை சொந்தங்களை கொண்டவர். எத்தனை தீட்டு
ஒதுக்கி ஒதுங்கி வாழ்ந்தவர். பிரம்மன் தலையில் பிறந்தவர். இப்படி வெட்டியாங்கிட்ட கொடுத்து விட்டீர்களே.

வாங்க சாமிங்களா நம்ம அவருக்கு காரியம் செய்யலாம் என்று அழுதான்.

இது கேட்டு பதறி போனார்கள். அவர் தீட்டா ஆயிட்டாரு. அவரை தொடக் கூடாது என்றார்கள்.

வேலைக்காரனால் இந்த பதிலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வெட்டியான் கால் அடியில் தலையில் பிறந்தவர் கிடக்கலாமா? அவன் கை படலாமா?
தொடதீங்கடா. எசமானனுக்கு ஆகாது. அவருக்கு கோபம் வரும். அவரு ஏத்துக்க மாட்டாரு என்று
வேலையை தடை சொய்தான்.

பண்டிதர் உறவினர்கள் எல்லோரும் முகம் சுழித்தனர்கள். உறவினர்களுக்கு கோபம் வந்தது. தேவை இல்லாது மற்றவங்களையும் மாட்டி விடுதான் இந்த வேலைக்காரபயல்.

அவர்கள் சிலர் அவனை பிடித்து இழுத்து சென்றார்கள்.

அவர்களில் ஒருவர் கூறினார். இப்ப வெட்டியான் கால் படுகிறது. அப்புறம் வெட்டியான் கைபடும். நரம்பு விடச்சி புடைச்சா வெட்டியான் கையால அடிப்படனும். அப்பத்தான் பிணம் வேகும்.

இத்தனை காலமாக வெட்டியான் கையால் தான், தலையில் பிறந்தவர்களுக்கு விமோச்சனம் நடக்கிறது. படித்தவன் பாண்டித்தியம் எல்லாம் வீண் வறட்டு கௌரவம். படிச்சவன் ஏட்டை கெடுத்தான, பண்டிதன், விபூதி பட்டை போட்டவன் நாட்டை கெடுத்தான். பண்டிதன் நாட்டை கெடுத்தான்.

பாடும் வேதமொழிபவன் நாட்டை கெடுத்தான். இதுவே பழமொழி விளக்கம்.

அரிச்சந்திரன் பாட்டு பாடி தான் பிணத்தை அக்னிக்கு கெடுப்பான்.

வெட்டியான் தான் சிறந்த தகன கட்டிடத்தில் யாகம் வளர்ப்பவன். மனிதன் மெய்யான யாகம் உடல் தகனமே.

வெட்டியானுக்கே தானம் தர்மம் தேடி சென்று தருவது கர்மங்கள் கழியும். இதுவே சிறப்பு ஆகும்.

மெய் என்றனர் பண்டிதரின் உறவுகள்.

🕉️சிவம்மா🕉️

Share this:
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US