சிங்கக்குட்டி ஒன்று விளையாடிக் கொண்டே தனது கூட்டத்தை விட்டு வெளியே சென்றது, தடம் மாறிப் போனது. திரும்பி தனது இடம் போக வழி அறியாது திரிந்தது.
பின் ஒரு குள்ளநரிக் கூட்டத்தில் சேர்ந்து வளர்ந்து, இறந்த மிருகங்களை தின்றது. சிங்கக்குட்டி வேட்டை ஆடுவதை மறந்து அழுகிய மாமிசத்தை தின்றது. இவ்வாறு வாழ்ந்து பல காலம் உருண்டு ஓடியது.
ஓர் நாள் பெரிய உறுமல் சத்தம் கேட்டது, எல்லா நரிக் கூட்டமும் ஓடி ஒலிந்தன. சிங்கக்குட்டியும் ஓடி ஒலிந்துக் கொண்டு மெல்ல எட்டிப் பார்த்தது. மீண்டும் சிங்கம் கர்ஜித்தவாறு வந்ததைக் கண்ட குள்ளநரிக் கூட்டம் ஓட்டம் பிடித்தன.
குள்ளநரிக் கூட்டத்தையும் மிஞ்சி சிங்கக்குட்டி ஓடியது. ஓடி வந்த சிங்கக்குட்டியினை யானை நிறுத்தி, நீ இந்த காட்டின் இளவரசன் என்று கூறியது.
நீ இந்த குள்ளநரிக் கூட்டத்தோடு சேர்ந்ததால் குள்ளநரிக்கான குணமே உனக்கு வந்துள்ளது. நீ உன்னை அறியவில்லை. ஏனெனில் நீ சேர்ந்த இனம் அத்தகையது என்றது. இதனை அறிந்த தண்ணீர் குடிக்க வந்த யானை, சிங்கக்குட்டி தண்ணீரில் தன்னை காண் என்றது. உடனே யானை பிளிறிக் காட்டுவதைக் கண்டு தானும் பிடரியை சிலிப்பித்து, கர்ஜித்தது. அப்போது தான், தான் யார் என்பதை அறிந்தது.
இனம் அறிந்து சேர்ந்தால் தான் நலம் .
🌹சிவம்மா🌹.