இறைவனிடம் வல்லசுரர்கள் தங்களுக்கு மூன்று உலகம் வேண்டும். அது வெள்ளி, தங்கம் மற்றும் இரும்பினால் ஆனதாக இருக்க வேண்டும் .

அந்த உலகம் ஓரே நேர்கோட்டில் வரும் போது, ஓரே அம்பால் எய்து உடைத்தால் மட்டுமே
அழியும் படியாக வரம் கேட்டார்கள்.

ஈசனும் வரம் தந்தார்.

ஆனால் அசுரர்கள், பூமிக்கு தொந்தரவாக பூமியை சுற்றிவந்தார்கள். இதனால் சகல உயிரினம்
முதல் மனிதர்கள் வரை அனைவரும் கஷ்டப்பட்டார்கள்.

முனிவர்களும் தபம் செய்ய இயலவில்லை. யாராலும் அழிக்க முடியா வரத்தினை தந்ததால் வருத்தம் கொண்டார்கள். அம்பாள், பிரம்மா, விஷ்ணு உதவியை நாடினார்கள். ஆனால் அவர்களோ தங்களால் முடியாது என்றும், ஈசனை நாடுமாறு உரைத்தார்கள். அனைவரும் ஈசனிடம் சென்று தங்களை காப்பாற்றுமாறு வேண்டினார்கள்.

ஈசன் தக்க தருனம் வந்தது. முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். மகா விஷ்ணு விருப்பப்படி, ஒவ்வொருவரும் தங்களின் சக்தியை ஈசனுக்கு தந்து, போருக்கு ஆயத்த படுத்தளானார்கள். சூரியன் தேர் பாகனான். பிரம்மா தனது சக்தியை தேருக்கு தந்தார். விஷ்ணு தனது சக்தியை சக்கரத்துக்கு தந்தார். அம்பாள் தனது சக்தி முழுவதும் ஈசனது போர் புரியும் வில் அம்புக்கு தந்தார். ஈசனும் தேர் எறி போருக்கு தயார் ஆனார். மூன்று உலகமும் ஓரே நேர் கோட்டில் சேர வந்து கொண்டு இருந்தது. அனைவரும் ஈசனை போருக்கு ஆயத்தப்படுத்த
சம் போ மகாதேவா என்று கோஷம் எழுப்பினார்கள். ஈசனோ சாதாரணமானவராக நின்று கொண்டு இருந்தார்.

நேரம் ஆக ஆக சம்போ மகாதேவா என்று சத்தம் செய்தவர்களாக பயம் கலந்த எதிர்பார்ப்போடு
ஈசனை பார்த்த வண்ணம் இருந்தார்கள்.

மூன்று உலகமும் சிறிது நேரத்தில் ஓரே நேர் கோட்டில் சந்திக்க போவதை நினைத்து, ஈசனது போர் கோலமும், வீர செயலை காண தயாராக நின்று கொண்டிருந்தார்கள்.

ஈசனை நோக்கி, ஈசனது வல்லமை மிக்க நாமத்தை உரைத்து, அவரது செயல் காண காத்திருந்தார்கள்.

ஈசனோ சர்வசாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

பிரம்மா, விஷ்ணு, ஆதி சக்தி தேவர்கள், முனிவர்கள் அனைவரும் தங்கள் சக்தியை ரதம் சக்ரம் வில் அம்பு என்று தந்து விட்டு, ஈசன் வில் எடுத்து கையில் வைத்தவாறு இருந்தார்

இனி சிறிது நாழிகை தான் இருந்த்து. சம்போ மகாதேவா என்று கத்த சூரிய தேவன் ரதத்தை ஓட்டி கொண்டே நெருங்க, பயத்தில் ஈசனது தீர செயலுக்காக காத்து இருந்தார்.

ஈசனோ வில் எடுக்காது, அம்போடு நின்று இருந்தார். அனைவரும் பயத்தில் உறைந்து, ஈசனது போர் செயலுக்காக காத்து இருந்தார்கள். எந்த வில்லையும் வில் கணை தொடுக்க வில்லை.

உலக உலோக உருண்டை ஓரே நேர் கோட்டில் வந்தது.

ஈசனது முகத்தை பார்த்து கொண்டு இருக்கையில், ஈசன் ஓர் சிரிய கீற்றாக புன்னகை செய்தார்.

அசுரர்கள் உலகமான உலோக உலகங்கள் தூள் தூளாக ஆனது.

அனைவரும் இறைவனது ஜெக காரண பிரதாபங்களை அறிந்தார்கள்.

அண்ட சராசரத்தின் அனைத்தும் அம்பாள், தேவி, தேவர்கள், பிரம்மா, விஷ்ணு, சித்தர்கள் மற்றும் தவசிகள் அனைவரது சக்தியால் உடைக்க இயலாத உலகை ஓர் புன்சிரிப்பால் உடைத்தவர்.

எத்தனை வார்த்தைகள் இருந்தும், சொல்ல இயலாதது, அவர் திரிபுரம் எரித்த செயல்களை.

அத்தனை பரகிருத்தியான ஈசனை அன்பால் பெற்று விடலாம்.

🕉️சிவம்மா🕉️

Share this:
× CHAT US