திருவண்ணாமலையை இறைவன் மலையாக அல்லாது யோக பூமியாகப் பாருங்கள்

திருவண்ணாமலையை இறைவன் மலையாக அல்லாது யோக பூமியாகப் பாருங்கள். அது கர்மபூமி. நம் கர்மத்தை தொலைக்கும் பூமி. தலையிருக்கும் வரை வலியுண்டு. அது போன்யற கர்மம் இருக்கும் வரை உடலுண்டு. கர்மம் முடிந்தால் உயிர் உடலைவிட்டு விலகிவிடும். இறைவன் தந்த உயிர் நம் செய்கடன், கடமை இரண்டையும் முடித்தவுடன் உடலைவிட்டு விடும்.

நாம் நிலையில்லா இந்த உலகில் நிலையான ஒன்றை அறிய வேண்டும். அந்த நிலையான ஒன்றுடன் நிலைத்து இருக்க வேண்டும். நிலையான ஒன்று எது என்று அறியப்படுத்துவது திருவண்ணாமலை.

திருவண்ணாமலை ஒரு யோக பூமி

திருவண்ணாமலை ஒரு கர்ப்பக பூமி

திருவண்ணாமலை ஒரு தப பூமி

திருவண்ணாமலை ஒரு சித்த பூமி

திருவண்ணாமலை ஒரு மெய்ஞான பூமி

திருவண்ணாமலை ஒரு சித்தர்கள் பூமி

திருவண்ணாமலை ஒரு கர்ம பூமி

சிவமே சிவகாந்தமாக வெளியிட்டுக் கொண்டிருக்கும் பூமி. இங்கு இறைவனே மனிதனாக, சித்தனாக, யோகியாக, ஞானியாக, பரதேசியாக, பண்டாரமாகச் சுற்றித் திரியும் பூமி.

இறைவன் தான் படைத்த குழந்தைகளிடமே யாசிக்கும் பூமி. ஆம் உங்கள் மனதையே யாசிக்கிறார். யோகமாக இருந்தால் உங்கள் மனம், சிந்தனை இரண்டும் இறைவனுக்கு உரியதாகப்படுகிறது. போக வாழ்கையில் உங்கள் மனமே இறைவனுக்கு உரிதாகிறது. இங்கு உங்கள் மனம் ஆகிய குணம் தரம் பார்க்கப்படுகிறது. இங்கு நீங்கள் நடந்துக் கொள்ளும் முறையில் உங்கள் மனதின் குணம் வெளிப்படுகிறது. திருவண்ணாமலையில் மட்டும் நல்லவராக நடக்கக்கூடாது. எப்பொழுதும் நல்லொழுக்க மனிதனாகவே இருங்கள். உண்மையான சிவபக்தர்களின் அடையாளம் நன்நடத்தையே. உங்களின் நன் நடத்தையே. இங்கு நம் நடத்தைகள் பஞ்ச பூதங்களால் (துலாம்) சரிபார்க்கப்பட்டு பின்னரே இறைவன் முன் நிறுத்தப்படுகிறார்கள்.

சிவத்தை விரும்புபவர்கள். சைவர்களாக இருக்க வேண்டும். சிவ நெறியை தழுவியே வாழ வேண்டும். அப்போது தான் பஞ்ச பூதமும் நமக்கு பரிவர்த்தனம் செய்யும். உண்மையான அன்பு சிவமாகும் போது சிவத்தின் பெருங்கருணைக்கு நீங்கள் உட்படுவீர்கள். இதனால் சகல உயிர்களும் உங்களை விரும்புவதை உணர்வீர்கள்.

திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

1. இங்கு வருபவர்கள் நல்ல மனிதனாகவும், நல்ல பக்தனாகவும் இருக்க வேண்டும். மது, மாது, மாமிசம், சூது இருக்கக் கூடாது.

2. மனித ஒழுக்கத்துடன் கூடிய நீதிகளைக் கடைபிடியுங்கள். சிவ காப்பாகிய திருநீரு, ருத்திராட்சை, கமண்டலம், தண்டம், தர்பை, பாதக்குறடு போன்றவற்றை யோகிகளானாலும் போகிகளானாலும் உபயோகிக்கலாம். ஒழுக்கத்துடன், நல்ல மனதுடனும் இறைவனை நாடுங்கள். நீங்கள் சிறந்த பக்தன்.

3. சிவகாப்பிய திருநீரு, ருத்திராட்சை அணிந்தவர்கள் அனைவருமே சிவபக்தர்கள், சிவதொண்டர்கள், சிவனடியார்கள் என்றே அர்த்தம், சிவனடியார்கள் என்றும் அன்பு மயமானவர்கள். சிவனடியார்கள் சிவநெறியோடு கூடியவர்கள். சிவனடியார்கள் பந்த பாசம் துறந்தவர்கள். சிவனடியார்கள் பரோபகாலம் அற்றவர்கள். சிவனடியார்கள் பொன், பெண் தொடாதவர்கள். சிவனடியார்கள் யாசித்தே வாழ்பவர்கள். சிவனடியார்கள் பரதேசிகள். சிவனடியார்கள் பரம சாதுக்கள்.

சிவனடியார்கள் பறவையைப் போல் உண்டு, உறங்கி, சுதந்திரமாய் வாழ்பவர்கள். சிவனடியார்கள் சிவ ஜாதியினர். சிவனடியார்கள் படிப்பறிவு தேவையற்றவர்கள். சிவனடியார்கள் வீடு, மனைவி, மக்கள் துறந்தவர்கள்.

தெய்வத்திடம் நன்மதிப்பையும், மரியாதையையும் பெறுங்கள். தாய், தந்தை, குரு சொல் கேட்காமல் இருந்து விட்டு, இறைவன் நாம் சொல்வதை கேட்க வேண்டும், செய்ய வேண்டும் என்று எண்ணுவது தவறு. இறைவனின் முன் குழந்தையாகவே செல்லுங்கள். இறைவனை நன்கு அறிந்தவர்களிடம் எந்த பேதமும் இருக்காது.

பேதம் தங்களிடம் இல்லை என்று கூறிக் கொள்ளும் சிவனடியார்கள். சிலர், தங்கள் பெயரின் பின் ஜாதியையும், படிப்பையும் போட்டுக் கொள்வார்கள். அதற்குக் காரணம் இறைவனை அறியாத அறியாமையே. இறைவனிடம் பொன், பொருள், போகம், படிப்பு, புகழ், மதம், இனம் செல்லாது.

எப்போதும் இறைச் சிந்தனையில் வாழ்வது தபம். வீடு, மனைவி, மக்கள், பந்தபாசம் துறந்து என் சிந்தனையில் சிவம் ஒன்றே, என்று 12 வருடம் அசைவறு இருப்பவர்கள் தபசீலர்கள். தபமே செய்யாது தபசீலர் என்று பெயருக்கு முன் போடுவது சிலரின் அறியாமையே, இறைவனை அறிந்தவனிடம் இறைவனைத் தவிர வேறு எதுவும் இல்லை. முக்கியமாக பூமியின் ஜீவனாடிகள் திரு அண்ணாமலைக்குச் செல்லும் முன் விரதங்களை கடைபிடித்துச் செல்லுங்கள்.

‘தில்லையைக் காண, காசியில் இறக்க

சிறக்கும் திருவார்ஊர்தனில் பிறக்க

எல்லையில் பெருமை அருனையை நினைக்க

ஏய் தலம் முக்தி என்றுரைத்தீர்’

-அருணாச்சலப்புராணம்.

இப்படி நினைத்தவுடன் முக்தித் தரும் திருஸ்தலம் திருவண்ணாமலையின் எல்லையில்லா பெருமையை வாயால் மட்டுமல்லாது மனம் கொண்டு புகழ வேண்டும். இப்பார்தனில் யாம் நோக்கம் இப்புனித இடம் அறிந்து தேடி, ஓடி, வர வேண்டுகிறேன்.

இந்திரியங்கள் அடங்க இயமம், நியமம், ஆசனம், பிராணாயமம், பிரத்தியாகரம், தாரணை, தியானம், சமாதி இவற்றை கற்கும் முதுநிலை பள்ளி அருணாச்சலம்.

பாவங்களைப் போக்கும் திருவண்ணாமலை கிரிவலத்தின் போதும், கோயிலில் சென்று அண்ணாமலையானை தரிசிக்கும் போதும், பக்தர்கள் சில நெறிகளைக் கடைபிடிக்க வேண்டும்.

1. பாவம் போக்க சென்று பாவம் சேர்க்காதீர்கள். கர்ம வினையின் பயனே நம் பிறப்பு, இப்பிறவியிலாவது பிறப்பு இல்லாது இறைவனை அடைய வேண்டும். நாம் கோயில் செல்லும்போது உபகாரம் செய்யாவிடிலும் பரவாயில்லை உபத்திரமோ செய்யாமல் திரும்புவோமாக.

2. சூடம், கற்பூரம், பிளாஸ்டிக் கவர் போன்றவற்றில் சிவன், இறை உருவங்கள் போட்டு அச்சு அடிக்காதீர்கள். இந்த பாக்கெட்டுகள் கீழே பல லட்சம் பாதங்களில் மிதிப்படுவது படுபாதகமான பாவம். இறையைக் காணத் துடிக்கும் நாம் இறைவன் உருவம் பதித்த படங்களை மிதிப்பது எந்த விதத்திலும் நியாயமற்றது. அதனால் அந்தக் கவர்களை சேகரித்து உரிய இடத்தில் போடுங்கள். உங்களால் முடிந்த அளவு காணிக்கையை உண்டியலிலும், தர்ம்மாக பிச்சையும் இடுங்கள். இதற்க்காக காசு உண்டியல் சேகரித்து கோயிலுக்கு கொண்டு வாருங்கள்.

3. தர்மமாக கொடுக்கப்படும் உணவை வேண்டுமானால் உண்டு விட்டு இலையை குப்பையில் போடுங்கள். சாப்பிட முடியாத அளவு வாங்கி கீழே எரியாதீர்கள். அண்ணம் வீணாக கீழே போட்டாளோ. அல்லது மிதி பட்டாளோ பாவம். இங்கு அண்ணாமலை, தாய் உண்ணாமலையே ஒவ்வொரு ஜீவனுக்கும் படி அளக்கிறார். ஈசன் அளக்கும் படியை தூர எறியாதீர்கள். இறைவன் யாசிப்பதும் இறைவி உணவளிப்பதும் நீங்கள் அறிந்ததே. யாசிப்பவரை ஈசனாகவும், அளிப்பவரை அண்ணப்பூரணியாகவும் நினையுங்கள்.

4. இறைவனை சுற்றி (மலை) வரும் போது பேசாதீர்கள். இறை நாமம் சொல்லியபடியே நடங்கள். கோயிலுக்கு செல்லும் போது முதலில் உங்கள் உடல் கழிவுகளை வெளியே சுத்தம் செய்தபின் கோயிலுக்குள் செல்லுங்கள். உடல் கழிவுகலுடன் செல்லாதீர்கள்.

5. ஆண்களே பாவம் போக்க வந்த நீங்கள் பாவமான காரியத்தை செய்யாதீர்கள். உங்கள் சிறுநீர் கழிவை உரிய இடத்தில் கழித்த பின்னரே நடக்க முற்படுங்கள். கண்ட இடத்தில் எல்லாம் ஆண்கள் என்பதால் அசுத்தம் செய்யாதீர்கள். அது மஹாபாவம் மட்டுமல்லாது தெய்வக் குற்றமாகும். இங்கு பாதரட்சை அணியக் கூடாது என்பது மட்டும் அல்லாது, இங்கு ஒவ்வொரு கல்லும், மண்ணும் புனிதமானது.

சிவ சொத்து குலநாசம், எனவே சிவன் சொத்தை அசுத்தம் செய்யாதீர்க்கள். சுகாதாரமாக வையுங்கள். கிரிவலம் செல்லும் வழியில் மலையைப் பார்த்து இறை தரிசனம் செய்ய வேண்டும். பல பாவிகள் மலை நோக்கி சிறுநீர் கழிப்பதை என்னவென்று சொல்வது. பெண்கள் கண்ணில் படாது சிறுநீர் கழியுங்கள். பெண் சக்தியின் பிறப்பிடம். ஆதலால் வெறுப்பைச் சம்பாதித்து துஷ்ட செயலால் சாபத்தைச் சம்பாதிக்காதீர்கள்.

6. இயந்திரமயமானக் காலத்தில் நீங்கள் இருப்பதற்காக அவசர அவசரமாக கும்பிட்டு, பிறரையும் மிதித்து துன்பப்படுத்தீர்கள். இறைவனை தரிசிக்க கால நிர்ணயம் செய்து, அந்த நேரத்தை இறைவனுடனே செலவு செய்யுங்கள். வீண் பேச்சு, சண்டை, விவாதம் செய்யாதீர், மஹாபாவம். தரிசனத்தின் போது மௌனத்தைக் கடைபிடியுங்கள். எவ்வளவு நேரம் வரிசையில் நின்றாலும் பரவாயில்லை. அதை உங்களின் அதிஷ்டமாக எண்ணி, அந்நேரத்தை வீணாக்காதீர்கள். வீட்டுக் கதைகளும் பேசாதீர்கள். உங்களுக்கு தெரிந்த இறை நாமத்தை ஜெபியுங்கள். ஜெபம், தபம் செய்ய ஏற்ற இடம் இது போன்று வேறுஇல்லை.

7. இங்கு வருவோர் கோபம், தாபம், மனம், மாச்சல்யம் விட வேண்டும். எதையாவது விடுவது என்று குப்பையை விடாதீர்கள். உங்கள் கோபத்தை விடுங்கள் பிறர்க்கு பஸ்சீட், உணவு, நீர், தர்மம் முடிந்தால் பணம் போன்றவற்றை பெரிய உதவுயாக நினைத்து செய்யுங்கள், இறைவன் அருளை பெற.

8. இளைஞர்களே இது இறைதரிசன நேரம். இந்நேரத்தில் சந்தோஷம் என்ற பெயரில் பிறர் கவனத்தை தம் மேல் திருப்பாதீர்கள். இறைச் சிந்தனையுடனே வரிசையில் நின்றிருங்கள். உங்கள் இளமைக் குறும்புகளை மூட்டைக் கட்டி வையுங்கள். நீங்கள் பிக்னிக் வரவில்லை. பலக் கஷ்டங்களைத் தாண்டிக் கடந்து வந்தவர்களை நிம்மதியாக இறை தரிசனம் செய்ய விடுங்கள்.

9. ஆண்களே இங்கு வரும் பெண்களை சக்தி சொரூபமாக காணுங்கள். வயதில் பெரியோராக இருந்து கீழ்த்தரமான சில்மிஷச் செயல்களைச் செய்யாதீர்கள். பெண்ணின் மனபாதிப்பை உங்களால் உணர முடியாது. ஒரு தாயால் மட்டுமே உணர முடியும். தாய் உண்ணாமலை காக்கட்டும் பெண்களை.

10. பெண்களே இறை தரிசனம் செய்ய வந்துள்ளோம். பிறர் கண்களையும், கவனத்தையும் ஈர்க்கும் ஆடையையோ, நகையையோ, உடலையோ காட்டாதீர்கள். பெண்களே பௌத்திரம் பொதிந்த நிலையிலேயே இறைவனை தரிசியுங்கள்.

முனிவர்கள், சித்தர்கள், போன்றோர் சூட்சும ரூபத்தில் கிரிவலம் சுற்றுவார்கள். அப்போது அவர்கள் ததஸ்து என்று அதாவது அப்படியே அகட்டும் என்பார்கள். ஆதலால் நல்லதே நினைத்து, நல்லதே பேசி கிரிவலம் சுற்றுங்கள். இறைவனை புறவுலகில் தேடுபவன் பக்தன். இறைவனை சித்தத்தில் தன்னுள் உணர்ந்து அமர்த்துபவன் சித்தன். சித்தர்கள் இறைவனைத் தன்னுள்ளே காண்பார்கள். நற்காரியம் செய்து, நற்கருணை புரியும்போது மனிதனிடம் தெய்வீகம் வெளிப்படும்.

எல்லாம் சிவமாக ஆன்மா என்னும் ஆன்மீகத் தீபத்தை ஏற்றுங்கள்.

‘தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்தவர்க்கும் இறைவா போற்றி’

எப்பொழுதும் இறை சிந்தனையுடம் இருங்கள். இறை அருளைப் பெற இறை உள்ளபடி சுபமாகட்டும்.

சசிவனை முழுமையாக அறிந்தவர்கள் உலகில் யாரும் இல்லை. முப்பத்து முக்கோடி தேவர், ரிஷி, முனிவர்கள் அறிந்த முழுமை ஓர் துளியே. எல்லாம் அறிந்த இறைவன் நாம் அறிவு இருந்தும் அறிய முடியாதவர்களாய் இருப்பதும் உண்மை. இறைவன் உள்ளான் என்றவருக்கு இறைவன் இருக்கிறார். இறைவன் இல்லை என்பவர்க்கு இல்லை என்றும் இருக்கிறார். இறைவன் அறிய அக தூய்மை மட்டும் தான் வேண்டும். இந்த ஒன்றே ஒன்றோடு ஒன்று வழி காட்டும். இறைவனில் முதல் பக்தி நிலையில் இருப்பவர்கள்
உணர முடியாது. அவரை உணர உலக மாயை எதுவென்று உணர வேண்டும். இவ்வுலகை யார் இயக்குகிறார் இவ்வுலகில் எது நித்தியம் ஆனது, இவ்வுலகிற்கு ஏன் வந்தோம்? இவ்வுஉலகில் எவ்வளவு காலம் வாழ்வோம், இவ்வுலகில் எவ்வளவு அனுபவிப்போம், இவ்வுலகில் மரணத்திற்கு பின் எதை எடுத்துசெல்வாய், இவ்வுலக வாழ்வுக்கு பின் எங்கு செல்வாய்? இவ்வுலகில் அவ்வுலகிற்கு எது உதவும்? இவ்வுலகில் எது உண்மையானது, எது மாறாதது, என அறிந்து கொள் அதுவே உனக்கு நித்தியமாக
உதவும் என்பதை அறி. பிறப்புக்கு முன் நான் யார்? பிறப்புக்கு முன் எங்கு இருந்தாய்? என்பதை அறி.

திருவண்ணாமலை சிவபக்தர்களுக்காக,

கிரிவலப்பாதையில் வரும் சிவபக்தர்கள் உள்ளம் உருகி, உருகி இறை நாமத்துடன் இறைவனை துதி செய்வோர்க்கு இப்பாடல் வர பிரசாதமாக அமையும். இறைவன் இயற்கையிலேயே சிவம் அருவமும் உருவமுமாக காட்சி தருகிறார். இக்காட்சியை வர்ணிக்க ஏற்றதொரு வார்த்தையும் இல்லை. உலகெல்லாம் பெரியதோர் தெயெவம் சிவம், சிவமே தாயும் தந்தையும், கருணைக் கடலாகிய தயாபரத்தை மெய்யுருகி போற்றி பணியுங்கள்.

சிவபக்தர்களுக்கு சிவார்ப்பணம்

தியானேஷ்வரால் அருளப்பட்டது

மோ. சிவராஜேஸ்வரி

அண்ணாமலை திருத்தலத்திற்கு ஒர் உதவி

தர்மம் செய்யுங்கள், தர்மம் செய்ய,

மனத்தூய்மை செய்வது போல்

ஸ்தலத்தை தூய்மையாக வையுங்கள்

பாவம் போக்கும் ஸ்தலத்தில்

வந்து பாவம் செய்யாதீர்கள்.

நெய்

நெய் என்பது மெய் ஆகும்.இந்த மெய் அறிய வேண்டுமாயின் இறைவன் அருள் வேண்டும் இந்த அருள் திருவருள் எனப்படுகிறது இந்த திருவருள் குருவருளால் தீண்டப்படும் தீண்டப்படுவது இறை அருளே ஆகும். நெய்யாகிய மெய் என்னும் ஆன்மாவை அறிவது ஆகும்.உடலில் உள்ள உயிர்இ உடலில் உள்ள சிறிய ஜீவ ஆன்மாவை அறிகிறது பின்னர் இறைவன் என்றும் குருமூலம் தீண்டப்படுகிறது. ஒளி என்னும் நெருப்பு ஊட்டப்படுகிறது பின்னரே அகண்டத்தில் உள்ள நெய்யால் பிரகாசிக்கிறது பிராகசிப்பது நம் உயிர் ஜோதியே ஆகும். இதனால் தான் உருவம் உள்ள கோவில் இருந்து நெருப்பு எடுத்து சென்று மலைமேல் உள்ள அகண்டத்தில் ஜோதி ஏற்றப்படுகிறது.

உயிரை ஜோதியாக்கு விடு என்பதை உணர்த்துகிறது திருவண்ணாமலை தீபஜோதி. யோகி ஞானிஇ தபசி சன்யாசிகள் இதை உணர்த்தும் பொருட்டுதான் மஹாஜோதி ஏற்றப்படுகிறது உயிரை ஆன்மாவோடு சேர்த்து விடு என்பதை நமக்கு சூட்சுமமாகவே உணர்த்துகிறார்கள் இறைவனை அடைய பலவழியும் பலநிலை உள்ளது. இறைவனை அடைய பல உணர்த்துதல் உண்டு அதில் திருவண்ணாமலை ஜோதியும் ஒன்றாகும்.

நெய்விளக்கு

கோயில் நெய்விளக்கு ஏற்றுகிறார்கள்; என்றால் அதன் சுடர் மிகவும் பிரகாசம் ஆனது. நெய் அடர்த்தியும் அதிகம் அதிக நேரம் எரியும் என்பதாலும் நெய் விளக்கு ஏற்றப்படுகிறதுகோயில் நெய்விளக்கு ஏற்றுகிறார்கள் என்றால் அதன் சுடர் மிகவும் பிரகாசம் ஆனது. நெய் அடர்த்தியும் அதிகம் அதிக நேரம் எரியும் என்பதாலும் நெய் விளக்கு ஏற்றப்படுகிறது.

நெய் விளக்கின் யோகரகசியம்

நெய் விளக்கு அல்ல

மெய் விளக்காகும்

யோகி ஞானி சித்தர்கள்தாங்கள் ஏற்றியது மெய் விளக்கே.

பசு நெய்யில் விளக்கு ஏற்றவேண்டும் என்பார்கள்

பசுபதி என்பது இறைவன் நாமம் ஆகும்.

பசு என்பது உயிர் பதி என்பது இறைவன்

பசு என்பது உயிர் ஆகும்.

நெய் – என்பது மெய் ஆகும்.

உயிர் மெய்யை அநிய வேண்டும் உயிர் மெய்யை உணரவேண்டும் உயிர் மெய்யை திழைக்க வேண்டும் உயிர் மெய்யாகி இருக்க வேண்டும் உயிர் மெய்யாகி உடலில் விடுவிக்க வேண்டும். இது யோகரகசியம் ஆகும்.

இதுவே உயிர் மெய் ஆகும். நம் உடலில் உள்ள உயிர் சக்தியை மெய் என்னும் ஆன்மசக்தியோடு கலக்குவதே யோகம் ஆகும். இறைவனை அடையும் வழியே ஆகும். உயிர் மெய் பொருளை அறிவது தான் தபம் ஆகும். இறைவனை நோக்கி உயிரை செலுத்துவது தபம் இறைவனிடம் இருந்து கலந்திருப்பது முக்தநிலையாகும். இறைவனாகவே இருப்பது மெய்யாகும் அதாவது தபசித்தியாகும். உயிர் மெய்யாக்கி இறைவனை நோக்க வேண்டும். இதையே உணர்த்தும் பொருட்டு பசு நெய் ஊற்றி விளக்கு ஏற்ற இறைவனின் அருளைப் பெறலாம் பசு நெய் ஊற்றி இறைவனிடம் வேண்டுதல் வைக்கின்றார்.

பசுவாகிய உயிரை மெய்யாகிய ஆன்மாவை தன்னுள் இருப்பதை அறிய வேண்டும். பின்னர் பரமாத்துமா என்னும் பேர் ஆன்மாவாகிய இறைவனை அடைய சிறிய ஆன்மாவாகிய உயிரை கலந்து இருக்க செய்து இறைவனிடம் உயிர் ஜோதியாக்கி காட்டுவதே தபமுயற்ச்சி பயிற்ச்சியும் ஆகும். சிறிய ஜீவ ஆன்மா நம் உள் இருப்பதை அறிந்து உணர்ந்து கலந்து அதுவாக மாறுவது தான் மனிதனாய் பிறந்தபலன் ஆகும். யோக ரகசியம் யாது எனில் உயிர் மெய்யாக்கி இறைவனிடம் காட்டுவதே தப வித்தையாகும்.பக்தியில் இறைவனுக்கு பசு நெய் விளக்கு ஏற்றி அருளைப் பேறாம்.

எல்லாம் துறந்து யோகி பசு நெய்யிக்கு எங்கே செல்வது பசுவும்இ நெய்யும் நம்முள்ளே என்பதை அறிந்து நெய்யை பதியாக்க வேண்டும் பசுவை மெய்யாக்குவதே மெய் பசுவை ஆன்மா கலக்கி ஆன்மாவாக மாற்றுவதே மெய் என்பது தபம் ஆகும்.

மஹரஜோதி

மஹரம் என்பது சிறு சிறு துகள்களைக் குறிக்கும்.(உ.த) மஹரந்தம் என்பது பூவின் உள்ள இனவிருத்தி செய்யும் சிறு சிறு துகள்களை குறிக்கும். ரந்தம் என்பது அதன் வெளியிடும் துவரத்தின் பகுதியாகும்

மஹரஜோதி என்பது சிறிய ஜோதியே ஆகும்(உயிர் என்றும் சிறிய ஜோதியே)

இதை மஹரசங்கிரந்தி என்பார்கள். நம் உடல் உள்ள சக்கரத்தின் மூன்று பிரிவுகளை குறிக்கும் பிம்மகிரந்தி விஷ்னுகிரந்தி ருத்திரகிரந்தி இந்த முன்றும் சக்கரங்களை பினைக்கும் முடுச்சுக்களாகும் இதுபோன்றே நமமுள்; உள்ள சக்கரம் என்றும் மலர்போன்ற (வடிவான) இயக்கத்தை கிரந்தி என்கிறோம். இதுபோன்று சங்கரங்களால் தரப்பட்டால் மலரே சங்கிரந்தியாகும். மஹர நட்சத்திரத்தில் இந்த சங்கிரந்தி ஏற்றுவதே மஹரசங்கிரந்தியாகும்.

எல்லோரும் மலையில் உள்ள ஜோதியைக் காணமுடியாதக் காரணத்தால் வீடு கிராமம் நகரங்களிலும் சங்கிரந்தியை கொண்டாடுவார்கள். வீடுகளில் விளக்கு ஏற்றுவதும் கிராமத்தில் சுந்து கொழுத்துவதும் நகரங்களில் சொக்கர் பானை கொழுத்துவது வழக்கத்தில் இருந்து வருகிறது. அகரம் + உகரம் + மகரம் என்னும் மாயை விளக்க வீடுகளில் விளக்கும் தெருக்களில் சொக்கர் பானை கொழுத்தப்படுகிறது.

சங்கரந்தி என்பது கிரந்தங்களில் உளன்று அதாவது தொகுப்பின் புள்ளியாகும் சங்கரந்தி மற்றொரு பெயரும் உண்டு சங்கம் + சேர்க்கையை குறிப்பது இரு சக்தியின் சேர்க்கையே கிரந்தியாகும். மற்றோன்று பெயர் சூட்சுமம் உள்ளதும் சங்கரனை குறிக்கும் சிவனின் பெயர் ஆகும். சங்கரனிடம் வந்த ஜோதிக்கு சங்கிரந்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரந்தி பூவின் மகரந்தம் எவ்வாறு மகரந்த துகழ்களை கொண்டது. மகரந்த துகழ் உருளை வடிவம் கொண்டது ஆகும். இந்த துகழ் போன்று சங்கரந்தி ஜோதி உருளையான (டீயடட) போன்ற வடிவத்தில் உள்ள ஜோதி ஆகும். மணி போன்ற ஜோதி.

மணி வடிவில் ஆனது “சூடாமணி” போன்றது அல்ல இது சூடும் மணியாகும் இம் மணியை அணிந்தவர் வானவர் அவர் இவர்கள் தெய்வாம்சம் வந்து விடும். முடிவுலகமும் பயணிக்கலாம் சகலஜிவராசிகளும் வசியம் ஆகும். இறைவனின் ஜோதி மணி இம் மணியை ருத்திரகிரந்தியாகிய நம் கண்டமாகும் அதாவது நம் கழுத்தின் முன்பகுதியான உயிர் நாடியில் அணிய வேண்டும். இவ்வாறு அணியும் ஜோதி மணிக்கு நடக்கும் முக்காலம் காட்டும் வல்லமையை தரும்இ இந்த சங்கிரந்தி மணியை எந்த மணிதன் கண்டத்தில் (கழுத்தில்) அணிந்தாலும் மணிகண்டன் ஆகலாம் வானவரும் போற்ற தக்கமணி இது இவனிடம் பிறப்பிக்கப்படுவது இறைவனே தர வேண்டிய பொருள் ஆகும்.

Share this:

Leave a comment

[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US