உலகில் எத்தனையோ கோயில்களை கண்டு இருப்பீர்கள் ஆனால் திருவண்ணாமலை போல்
மலையையே கோயிலாகவும் மலையையே இறைவனாகவும் காண்பது அரிது.
திருவண்ணாமலை உலகில் அதி உன்னதமான கொள்கைகளை கொண்ட ஆன்மீக பூமியும் அருந்தவம் ஏற்ற சிறந்த இடமும் ஆகும்.
எல்லையே இல்லாதவனை இங்கு ஓர் எல்லைக்குள் கண்டும் நம் கருத்தில் திளைத்தும் அன்பால் நேசித்தும் நமது கருணை கரம் கொண்டால் அவனை அங்கிருந்து எடுத்தும் செல்லலாம்.
பஞ்சமலையில் பஞ்சமுகனான இறைவன் அழகாக மலர்ந்து உறைந்துள்ளதையும் காணலாம்.
உலகில் எங்கும் தேடினாலும் கிடைக்காத அற்புத காட்சி கொண்ட மலை அண்ணாமலை.
இங்கு போல் ஜோதி தரிசனம் காண கண் கோடி வேண்டும்.
இறைவன் இங்கு ஜோதியாக இருப்பதை ஒவ்வொரு தீப திரு நாளிலிலும் நாம் காணலாம்.
அண்ணாமலையார் தீபத்தை காண பல லட்சம் மக்கள் வருவார்கள்.
இங்கு 11 நாட்கள் தீபம் ஏற்றப்படும் . முதலில் 3 நாட்கள் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது ஆனால் பின்னாளில் பக்தர்கள் அண்ணாமலை ஜோதியை காணவே மலையில் 11 நாட்கள் தீபம் ஏற்றப்படுகிறது.
மக்கள் அலை அலையாக தீபத்தை தரிசனம் செய்ய வருவதை காணலாம்.
மக்கள் கூட்டம் நிற்காது நகர்ந்த வண்ணமே அண்ணாமலையின் தீபத்தை தரிசனம் செய்வார்கள்.
அண்ணாமலையாரை காண எந்த விளம்பரங்கள் எதுவும் செய்யப்படுவது இல்லை.
அண்ணாமலையை காண எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படுவதும் இல்லை.
அண்ணாமலையாரை காண வரும் பக்தர்களுக்கு சிவனடியார்கள் தங்கள் தொண்டாக கிரிவல பாதை முழுவதும் அண்ண தானம் செய்வார்கள்.
ஒவ்வொருவரும் இறைவன் நாமத்துடன் தாங்கள் அறிந்த விரதங்களுடன் கிரிவலம் வருவதை காணலாம்.
தங்களால் இயலாதவர்கள் வயோதிகர்கள் அண்ணாமலையார் கோயிலை மட்டும் வலம் வாருங்கள்.
அண்ணாமலையார் தீபம் காண வெளி நாட்டில் இருந்தும் மக்கள் வருகின்றனர்.
அண்ணாமலையார் தீபத்தின் அருமை பெருமைகளை தேடி உணர்ந்து வருபவர்களை காணும் போது நாம் அவர்களுக்கு பணிந்து சிவ தொண்டாற்றவேண்டும்.