இறைவன் நமக்கு தந்த அன்பளிப்பு இயற்கையும் அதன் கொடையும், இயற்கையினை போற்றி அதன் வளமையான அழகில் கண்குளிர மனம் மயங்க காண வேண்டும். மனம் கமழும் சுகந்தத்தை நாம் அனுபவிக்க நமது ஆயுள் கூடும்.

இயற்கையின் படைப்பில் மாமிச பட்சிகள் உண்டு அவைகளை தவிர, நமக்கு தீங்கு செய்யாமல் வாழ்பவையை நாம் கொள்ளவோ, உண்ணவோ கூடாது.

இறைவன் நமக்கு தந்த வரமே வீட்டு விலங்குகள். மனிதனை அண்டி வாழ்பவையை துன்பப்படுத்துவது பாவத்திலும் பாவம் ஆகும்.

இவ்வுலகில் நாம் வந்து போகும் காலத்தில் எத்தனை பேரின் வாழ்வில் ஏற்றம் இறக்கத்தை காண்கிறோம். அத்தனையும் மனிதன் செய்த விணையின் மற்றும் விதியின் பலனே ஆகும்.

மனிதன் இயற்கைக்கு செய்ததை இயற்க்கை மனிதனுக்கு செய்கிறது.

மனிதநேயம் இறக்கும் போது எல்லாம், ஓர் சம்காரத்தை இயற்கையே செய்து விடுகிறது.

ஆட்சியாளர்கள் இறைவனது பெயரை சொல்லி அநியாயம் செய்யும் போது நாடு அழிவையே சந்திக்கும்.

இறைவனையே சாட்சியாக வைத்து, ஏழைகளை ஏமாற்றினால் நாடு அழியும்.

இறைவனது பெயரை சொல்லி நாட்டை பிடித்தால் உலகம் அழிவையே சந்திக்கும்.

ஒருவனே உலகை ஆள வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும் உலகம் அழிவை சந்திக்கும்.

நம் சந்ததியினரை இயற்கையை நேசிக்க விடாது செய்யும் முன் உலகம் அழிவை சந்திக்கும்.

சிறிய நாடுகள் நீதியின் வழியில் சுதந்திரம் கேட்டும், அமைதி இன்றி புரட்சியால் என்றும் வருந்தி சாவதை உலகம் வேடிக்கை காண்பதும், ஏழைகளின் துன்பத்தை (பசி பட்டினியை, நோய் வலியை) உணராது பணத்தால் ஆர்பறித்து வாழும் நாடுகளையும் இயற்கையே அழித்து, மீண்டும் தோற்றுவிக்கும்.

தானம் தர்மங்கள் செய்யாத செல்வந்தர்கள் உலகில் யானே பெரிய செல்வந்தர்கள் என்று பட்டியல் இட்டு சேமிக்கும் போது, செல்வந்தர்கள் மதி இழக்கும் போது உலகம் அழிவை சந்திக்கும்.

இயற்கைக்கு புறம்பான விஷயங்களை செய்து, அது மனித விஞ்ஞான வளர்ச்சி எனும் போது உலகம் அழிவை சந்திக்கும்.

மெய் இறைவனை அறியாது, விஞ்ஞானமும், மனித முயற்சியும் இயற்கை தான் உலக சுழற்சி என்று இறைவனை மறக்கும் போதும் உலகம் அழிவை சந்திக்கும்.

மனித ஒழுக்கம், மனித நீதி, மனித பண்பு இல்லாது, மனிதனே மனிதனை அடக்கி ஆண்டு துன்புறுத்துவதும், இதுவே ஆளுமை என நடத்தும் காலத்தில் உலகம் அழிவை சந்திக்கும்.

ஏழைகள் மற்றும் உயிரினங்கள் அரைகூவல் அல்லது ஓலம் இடும் போது உலகம் அழிவை சந்திக்கும்.

நல்ல அரசாட்சி இல்லை என்றாலும் நாடு அழியும்.

மெய்யடியார்கள் அறியா வண்ணம் சைவத்தை அழிக்க நினைக்கும் போது உலகம் அழிவை சந்திக்கும்.

தென்னாட்டு மக்கள் சிவனுடையார்கள் சைவர்களையும் அவர்களது மதத்தையும் அழிக்க நினைக்கும் போதும் உலகம் அழிவை சந்திக்கும்.

சத்குரு சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா

Share this:

Leave a comment

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.