16 செல்வங்களை வரங்களாக தர கூடியவர் சொர்ண ஆகர்ஷண பைரவர். மகாவிஷ்ணுவிற்கே மாகலட்சுமியை தந்தவர். குபேரனுக்கு குபேர பட்டிணத்தை படைத்து தந்தவர்.
சொர்ண ஆகர்ஷண பைரவர், ஸ்ரீ அம்பாள் தேவியுடன் வாங்கவும்.
பைரவரை பூஜை அறையில் தனித்து வைத்து ஏக தீபம் அல்லது மண் அகலில் தீபம் ஏற்றவும்.
அவல், ஏலக்காய், பால், கற்கண்டு நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.
ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவாய
வந்து சகலசம்பத் தந்தருள்க.
என்ற மந்திரத்தை ருத்திராட்சமாலை பயன் படுத்தி தினமும் 108 முறை சொல்ல வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 365 நாட்கள் சொல்ல வாழ்வில் பெரிய மாற்றங்கள் வந்து அடையும்.
பச்ச அரிசி சாதத்தில் தயிர் கலந்து அதை வெளியில் சுற்றி திரியும் நாய்களுக்கு தர்மமாக செய்யவும். இரவு வெளியில் சுற்றும் நாய்களுக்கு, 3 கண் கொட்டங்குச்சி ஐந்து எடுத்து, அதனை நிறைத்து வைக்க தொழில் தடை நீங்கி, பண வரவு அதிகரிக்கும்
மந்திரம் சொல்லும் காலத்தில் ரத்தம் சம்பந்தமான உணவுகளை உண்ண கூடாது.
🌹🌹சிவம்மா🌹🌹
