ஒரு துறவி வெளியூர் சென்று கொண்டிருந்தார். போகும் வழியில் தண்ணீர் தாகம் எடுத்தது. அங்குள்ள ஒரு கடையில் அருந்துவதற்கு நீர் தருமாறு கேட்டார். துறவியைப் பார்த்த கடைகாரர், சாமி எனக்கு முக்தி வேண்டுமென்றான். துறவி சரி என்றார். எனக்கு சிறிது கடனும் கடமைகளும் உள்ளன முடித்ததும் வந்துவிடுவேன் என்றார். உலகம் ஒரு மாயை, உலகமே ஒரு மாயை என்று கூறி துறவி சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது காலம் கழித்து மீண்டும் அவர் அங்கு வந்தார். கடைகாரன் ஓடி வந்து அவருக்கு தண்ணீர் கொடுத்தான். சாமி இப்ப எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளைகள் இருக்காங்க. அவங்களை எப்படியாவது கரை சேர்த்துவிட்டு உங்களோடு வந்து விடுவேன் என்றார். உலகமே ஒரு மாயை, உலகமே ஒரு மாயை என்று கூறி துறவி சிரித்துக் கொண்டே காட்டிற்குள் சென்றார். மீண்டும் சிறிது காலம் கழித்து ஊர் வழியாக எப்போதும் வரும் கோயிலுக்குச் சென்றார். கடைகாரன் ஓடிவந்தான் சாமி எனது பையனுக்கு கல்யாணம் ஆகி விட்டால் எனக்கு வேறு எந்த ஒரு கடனோ கடமையோ கிடையாது. இந்தாருங்கள் தண்ணி என்று வழங்கினார். உலகமே ஒரு மாயை, உலகமே ஒரு மாயை என்று கூறி சிரித்துக் கொண்டே சென்று விட்டார். மீண்டும் துறவி கோயிலில் இருந்து காட்டுக்கு போகும் வழியில் கடையில் கடைகாரரைக் காணவில்லை. எங்கே என்று பார்த்தார். அப்பொழுது கடைகாரரின் மகன் ஓடிவந்து சாமி எங்க அப்பா இறந்து விட்டார் சாமி. அவர் முக்தி கேட்டாரு சாமி இறந்து போயிட்டாரு சாமி என்று அழுதான். அழுது கொண்டிருப்பவனிடம் அங்கிருந்து ஒரு நாய்குட்டி ஓடி வந்தது. பாருங்க சாமி, இப்போது இந்த நாய்குட்டி வந்த பிறகு தான் எங்களுக்கு சந்தோஷம். இது ஓடி ஓடி அப்படி காவல் காக்குதுங்க. எங்க மேல அவ்வளவு பாசமா இருக்குது சாமி என்றார். துறவி நாய்க்குட்டியைக் கண்டதும் ஒரு சிரிப்பு சிரித்தார். என்ன சாமி சிரிக்கிறீங்க என்றான் அவன். உடனே தன் கையிலிருந்த கமண்டலத்தை எடுத்து நாயை ஒரு அடி அடித்தார். உடனே நாய் பேசியது, சாமி உலகமே ஒரு மாயை, உலகமே ஒரு மாயை. என்ன செய்யறது, நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சத இந்த பசங்க அப்படி அப்படியே போட்டுவிட்டு தூங்குறாங்க. அதனால நான் இப்படித்தான் காவல் காத்து இருக்கேன். என் கடனை முடித்ததும் நான் உங்க கூட வந்துருவேன் சாமி கண்டிப்பாக. உலகமே ஒரு மாயை, உலகமே ஒரு மாயை என்றது. மீண்டும் ஒரு அடி அடித்து விட்டு போ என்று கூறிவிட்டுச் சென்றார். இறைவன் படைப்பில் நாம் அனைவரும் மாயை என்று அறிந்தாலும், கடன் மற்றும் கடமைகளைத் தவறாது செய்ய வேண்டும் என்று நினைத்த பின் ஒருநாளும் மாயையில் இருந்து தப்புவது இல்லை. எத்தனை பிறவிகள் எடுத்தாலும் மாயையிலிருந்து விடுபடுவது இறைவனின் விருப்பமாகும் என்று கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாம் தப்பிப்பது மிகக்கடினம். உலகமே ஒரு மாயை, உலகமே ஒரு மாயை.
You May Also Like
சிவ தேடுதல் உள்ளவரா நீங்கள்? அப்படியென்றால் இது உங்களுக்கான பதிவு
1273Views
இறைபசி – பேராசை பட்டால் தெருவுக்கு வருவான் என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?
727Views
மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?
1683Views
சங்கில் இருந்தால் தான் தீர்த்தம் என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?
829Views