வருகாலத்தில் கடும் பஞ்சம் வரும். இது வருடாந்திர பஞ்சமாக இருக்கும்.
பூமி மலட்டு பூமியாகும். வருங்காலத்தில் பூமி வரண்டும் நீர் தேக்கங்களே இல்லாது போகும்.
பூமி தண்ணீர் குடிக்காது, அதாவது பூமி நீரை உள் வாங்கி வைக்காததால் பூமியினுள் வறட்ச்சி எற்படும்.
இதனால் பூமியில் மலட்டு தன்மை ஏற்பட்டு அதன் காரணமாக பூமி தனது மென்மையான குணத்தை இழந்து, பூமி
வறண்டு போவதுடன் மண்ணில் வாழும் புழு பூச்சிகளும் மடியும்.
இதனால் மண்வளம் குறைந்து பிற்க்காலத்தில் வளம் இல்லாத மண் நல்ல விளைச்சல் தறாது.
மழை வந்தாலும் வறட்டு மண்ணீல் நீர் தங்காது. நீர் நிலத்தடி பார்க்காது ஓடிவிடும் .
மாடு போல் மக்கள் நளிந்து காணப்படுவார்கள். மனிதன் தன் வறண்ட மனதால் பூமியும் வறண்டு போகும்.
இதனால் வெப்பு நோய், சூளை நோய் வந்து விளையாடும். பஞ்சம் பிழைக்க பட்டினத்து மக்கள் எல்லாம் நாட்டைவிட்டு வெளியேற நினைப்பார்கள்.
விவசாயி தங்களுக்கு அநீதி விளை வித்தாக போராடுவார்கள். நாட்டின் மன்னனை எதிர்த்து தங்களது கிரமங்களின் நுழைவாயில்களை மூடிவிடுவார்கள். அவர்கள் தங்களை ஆதி குடியினராக வாழ விடுங்கள் என்றே வேண்டுதல் வைத்து கிராம வட்டத்துளே வாழ்வார்கள்.
விவசாயிகள் தாங்கள் தானியங்களை பயிர் செய்து விற்று பின் ஏன் பட்டி கிடக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெற்று பணத்தை நிராகரித்து கிராமங்களுக்குள் பண்ட மாற்று முறை செய்து வாழ்வார்கள். அது மட்டுமல்லாது விவசாயிகள் உணவு தானியங்களை யாருக்கும் விற்பனை செய்யமாட்டார்கள்.
சத்குரு சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா