இறைவனை பற்றிய இறைத்துவ தொகுப்பிற்கு வேதம் அல்லது திருமறை
என்று பெயர்.
திருமறை நான்கும் இறைவனை பற்றி மட்டும் கூறக்கூடியது. இறைவனை அடைய கூடிய நீதிகளை மனிதனுக்கு உபதேசிக்கிறது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரா், மாணிக்கவாசகர் இந்த நால்வரும் தமிழில் பாடியது தான் தமிழர்களுக்கு வேதம்.
திருமறைகள் மூலம் ஏக இறைவன் எம்பெருமான் ஈசனை அடையக்கூடிய வழிகளை கூறினார்கள்.
மனிதர்களுக்கு வேதம் என்பது அவரவர் மொழியில் தான் இருக்க வேண்டும்.
நால்மறையும் இறைவனை அறிந்து இறைவனை அடையவே ஆகும்.
அதற்க்கு காரணம் அறிந்து, புரிந்து, உணர்ந்து சிந்தித்து அதன் வழி நடக்க வைப்பது வேதத்தின் செயல்.
வேதத்தை படித்தவன் முதல் பாமரருக்கும் புரிய வேண்டும்.
தங்கள் தேடல்களும் தங்கள் அனுபவித்து அடைந்த வழிகளையும்
பாடல்களாக பாடிவைத்தார்கள்.
வேதத்தின் சாரத்தில்
இறைவனை பற்றி மட்டுமே இருக்க வேண்டும். வேதம் என்பது நமக்கு நால்வர் சொன்னதுவே .
நால்வர்களுக்கும் சிவன் கோயிலில் தனி சன்னிதி உண்டு.
ஈசனது திருக்கரங்களால் எழுதி திருச்சிறம்பலத்தான் என கையொப்பம் இட்ட சிவபுராண பாடல் கூறுகிறது.
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
எல்லோரும் பணிந்து ஏற்க்க வேண்டும் என்கிறார்.
நால்வர்கள் பாடல்களில்
தர்மத்துக்கு எதிர்மறையான சொல் செயல் பற்றிய பாடல்கள் இல்லை.
நால்வரது பாடலில் அதர்வணம் என்னும் தொகுப்பே இல்லை .
பிற மொழியில் உள்ள வேதத்தில் அதர்வணம் என்னும் எதிர்வினை செயல் உள்ளது.
ஒரு சாரார்க்கு மட்டும் உரித்தானது என்றால் அது பொதுமறை இல்லை.
அதர்வணத்தை சொல்லித் தந்தால் அது இறைவனுக்காணதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நால்வர் சொன்ன வேதம் எதுவென்று அறிவோம்
திருச்சிற்றம்பலம்.
️சத்குரு சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா ️