கால வைரவர், பைரவரையும் தொழுதால் விபத்தின்றி வாழலாம்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கீரிம் கால பைரவாய நமக.
ஓம் ரீம் கிலீம் வராகியே துணையாகு எனக்கு.
மந்திரமாக செய்ய பல கஷ்டங்கள் போகும்.
தினம் வெளியில் செல்லும் போது குறைந்தது 21 முறை வேண்டி சொல்லுங்கள்.
தொழில் தடை நீங்கும். தொழில் பகை இருக்காது. பைரவருக்கு வீட்டில் தனியாக வைத்து
விளக்கு ஏற்றவும். பால் வைத்தால் போதும். வீட்டு கஷ்டங்கள் போக நாம் தெரு நாய்களுக்கு உணவளிப்பதும். தீராத பாவ சாபங்கள் போகும். நாய்களுக்கு உணவு விட்டு வந்தால் சரியாகிவிடும். கடன் தொல்லைகள் தீரும். தீராத கோர்ட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். அதனால் காலமெல்லாம் நாய்களுக்கு உணவளித்து வரவும். நம்மில் இருந்து பல தீவினைகள் விலகும். ஒவ்வொருவரும் செய்த நல்வினை தீவினை பொறுத்தே நமக்கு தீங்கு வருகிறது. நாம் செய்யும் செயலின் காரண காரியங்களால் தான் தீவினைகள் வருகிறது. இதையே “செய்தார்க்கு செய்த வினை” என்பார்கள்.
நாம் செய்த வினை நம்மை பின் தொடவது தான் காரணம். அது தான் நமது கஷ்டங்களுக்கும் காரணம்.
நாம் துன்பம் இன்றி வாழ, பிறர்க்கு துன்பம் தராது வாழ வேண்டும்.
காலபைவர் வாரகி எல்லாம் காவல் தெய்வங்கள். காலபைரவர் சம்ஹார மூர்த்திகள். வாராகி படைத்தலைவி. இவர்கள் இருவரும் வணங்கத்தக்க தெய்வங்கள். மகா யோகினிகளில் வாராகி ஒன்று. மனிதர்களும் யோகிகளும் கால பைரவர் பூஜை பண்ணுவார்கள். இவ்வாறு கால பைரவரை தொழுபவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். இவர்களை காலபைரவருடைய பூதகணங்களும் வாராகியின் படைவீரர்களும் பாதுகாப்பார்கள்.
இருவரை வழிபாடு செய்தால் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.
இவர்கள் இருவரையும் தொழுது பின் நாம் வெளியில் சென்றால் விபத்துக்கள் இன்றி பாதுகாப்பாக வரலாம்.
இது முன்னோர்கள் அனுபவங்களாக இன்றும் இருக்கிறது.
காலபைரவர் என்னும் பொழுது அவருடைய பிரியமான வாகனம் நாய் ஆகும். விபத்துக்குள்ளான நாயினால் நமக்கு தோஷங்கள் வரவழைக்கப்பட்டது.
நாய் அடிப்பது, கார் ஏற்றி கொல்வது, மிகக்கொடுமையான பாவத்தை நாய்க்கு ஏற்ப்படுத்தும். நாயை அடித்து கொன்றால் நல்லது என்பது பலருடைய அறியாமை. இதை தீயவர்கள் தான் சொல்லுவார்கள்.
இதை அவர்கள் கொள்கையாக வைத்துள்ளார்கள். இந்த தோசம் நம்மை கடன்காரராக வைத்து இருக்கும். தொழில் நஷ்டம் ஆகும்.
முதலாளிகள் பிரச்சனை. நிரந்தர பணவரவு பாதிக்கும். நாய் எங்க கண்டாலும் கல்லால் அடிப்பார்கள். இல்லை லாரி கார் டயரில் ஏற்றுவார்கள். கொடிதினும் கொடிய பாவமான செயல். இவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு. இவர்கள் நாய் போல் துடித்தபடி இறக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
மரண காலங்களில் துடி துடித்து இறப்பார்கள். வாராகி வாகனமான பன்றியை நாம் அடித்துக்கொன்று தின்பது பல விதமான நோய்க்கு ஆளாகுவோம். வயோதிகத்தில் வர கூடியது ஆகும். வாராகி நம்மை விட்டு வைப்பதில்லை .
பன்றியை கொன்று மரணத்தை எற்படுத்துபவர்களின் நிலை. வயோதிக காலத்தில் தொண்டையிலிருந்து ஈழையுடன் கூடிய ஊளைச் சத்தம் வந்து கொண்டே இருந்து இறப்பார்கள்.
பன்றியை வாகனம் ஏற்றி அடித்து கென்று விட்டால் உடனே அந்த வாகனத்தை விற்று விடுவார்கள். காரணம் அதன் பின் அது நல்ல பலனைத் தரவே தராது. இது பலரது அனுபவமாகும். அதனால் விபத்தை நாம் செய்யாது இருப்போமாக.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஜீவகாருண்யம் வேண்டும். மிருகங்களை வதை செய்வது,
சித்திரவதை செய்து கொல்வதும் மிகவும் மோசமானது. இந்த கொடுமையின் தண்டனையை நாமே அனுபவித்து தான் ஆக வேண்டும். மிருகவதையை போல் கொடிய பாவம் உலகில் வேறு எதுவும் இல்லை. எந்த உயிரினம் ஆயினும் கொல்வதென்பது பாவமான காரியமாகும். இந்த சாபங்கள் நம் வாழ்க்கையில் பல துன்பங்களை தேடித்தரும். யார் மூலமாவது பணம் பொன் பொருள் போகம் போன்ற பல நஷ்டங்களை நமக்கு தரும். பல விபத்துக்களை வாங்கித்தரும்.
குழந்தைகளின் சந்ததியில் நோயாக அவை உண்டு பண்ணும். பல தலைமுறைகளுக்கு நம்மை பின்தொடருந்து வரும். நம் பல தலை முறை புண்ணியத்தை போக்கி பாவத்தை சேர்த்து வைக்கும்.ஒவ்வொருவரும் அறிய வேண்டிய முக்கியமான கருத்துக்கள் இவை.
🌹🌹சிவம்மா🌹🌹