விநாயகர் செய்யும் முறை
விநாயகர் பஞ்சபூதத் தலைவன். அதனால் கணநாதன் ஆவார்.
கணநாத தலைவனாக இருப்பதால், கணபதி என்றும் அழைக்கிறோம்.
பஞ்சபூத தலைவன் என்பதால், ஐந்து பொருட்களைகொண்டு விநாயகரை பிடித்து பூஜிக்கலாம்.
விநாயகரை மண், மஞ்சள், அரிசிமாவு, பசுஞ்சாணம் மற்றும் விபூதி போன்ற பொருட்களால் பிடித்து வைத்தாலே பிள்ளையார் ஆகி விடுவார்.
ஐம்பொன் விநாயகர் அல்லது பித்தளையில் பிள்ளையார் வீட்டில் இருந்தால் புதியதாக விநாயகர் வாங்க வேண்டாம்.
வீட்டில் உள்ள விநாயகரை வைத்து விநாயகர் சதூர்த்தி கொண்டாடுங்கள்.
விநாயகரை சதுர்த்தி முடிந்த பின், ஆற்றில் போடுகிறேன், குளத்தில் போடுகிறேன் என
தூர எரியாது சேர்த்து வையுங்கள்.
தவறானவர்கள் கையில் பணம் தந்து விநாயகர் தந்தால், அவர்கள் கண்ட இடத்தில் தூக்கி எரிந்தோ அல்லது அடித்து நொறுக்கி உடைக்கிறார்கள்.
மெய் அறியுங்கள்
அம்பாள் விநாயகர் இருப்பிடத்தில் வாசம் செய்பவள்.
விநாயகர் வீட்டில் இருந்தால் வினைகள் களையப்படும்.
துஷ்ட சக்தி வராது.
அதனால் வாஸ்து சரியில்லாத வீட்டின் நுழைவாயில் விநாயகர் வைத்து பூஜை செய்தாலே போதும், வீட்டில் உள்ள பிரச்சனைகள் தீரும்.
அதனால் தெருக்களின் முக்கு பகுதியான முச்சந்தியில் விநாயகர் வைத்து வணங்கும் வழக்கம் இன்றும் நம்மிடம் உள்ளது.
🕉️சிவம்மா🕉️