கிருஷ்ணன் கூறினார், பீஷ்மர், துரோணர், துரியோதணன் வெல்வதற்க்கு பசுபதாஸ்திரம் வேண்டும். ஈசனிடம் வாங்கி வா அர்ச்சுனா என்றார்.

பசுபதி அஸ்திரம் வாங்க அடர்ந்த காட்டில் தபம் செய்ய செல்கிறான். ஈசன் இந்நிகழ்வை அறிந்து அர்சுனனை காண வருகிறார். அவனோடு திருவிளையாடல் புரிய விரும்பினார். அதற்காக நடிக்க தயார் ஆனார். வேடுவன் போல் உருமாறி அர்சுனனிடம் வந்தார்.

ஒரு பன்றியை வரவழைத்து, அர்ச்சுனன் தவத்தைக் கலைக்க முயலுகிறார். எவ்வளவு முயன்றும் பன்றி தபம் செய்ய விடவில்லை. பன்றி இடையூறை தவிர்க்க நினைத்தான். அர்ச்சுனன் கண்விழித்து பன்றியை கொல்ல அம்பு எய்ய தயாராகிறான்.

இதை அறிந்த ஈசன் மரத்துக்கு பின்னால் நின்று கொண்டு அர்ச்சுனன் அழகை ரசித்தவர், அர்ச்சுனன் பன்றி மீது அம்பை எய்தபின் பன்றி கீழே சரியும் நேரத்தில், வேடனாக இருந்த ஈஸ்வரன் இரண்டாவது அம்பை பன்றி மீது எய்தினார்.

அர்ச்சுனன் முன் பன்றி வில்லோடு சாய்ந்தது. உடனே வேடுவன் வில்லோடு ஓடிவந்தான். பார் மானிடா எனது அன்பு முதலில் தைத்தல் பன்றி இறந்து விழுந்து விட்டது. பன்றியை எடுத்துச் செல் உன் வீரத்தை பாராட்டுகிறேன், என்றார். உடனே அர்ச்சுனன் பன்றியை முதலில் எனது அம்பு தைத்து தான் கீழே விழுந்தது, இரண்டாவது அன்பு தங்களுடையது என்றான்.

அதனால் பன்றியை கொன்றவன் யானே. எனக்கு பன்றி வேண்டாம். நீயே எடுத்துச் செல் என்றான் அர்ச்சுணன். வேடுவன் நானே முதலில் அம்பை எய்தவன். அதனால் இதைச் நீயே எடுத்து செல் என்றார். நான் பன்றியை எடுத்துச் செல்வதா. உடனே அர்ச்சுனனுக்கு கோபம் வந்தது. யான் தான் முதலில் அம்பு எய்தவன். எனக்கு பன்றி வேண்டாம். நீயே எடுத்துக் கொள் என்றான் . பன்றியை விடு. முதலில் யானே அம்பு எய்தவன் என்பதை ஒத்துக் கொள். என்றான் வேடுவன். அர்ச்சுனனுக்கு கடும் கோபம் வந்து முதலில் எனது அம்பு தைத்திருக்க காண் என்றான்.

யார் அம்பு என்று பார் விவாதம் ஏன் செய்ய வேண்டாம் என்றான் வேடுவர். உடனே வேடுவன், அர்ச்சுனா பொய் கூட அழகாக பேசுகிறாய் என்றான். அர்ச்சுனனுக்கு ஆச்சரியம் வேடுவனுக்கு நமது பெயரும் தெரிந்தது உள்ளது என்று நினைத்தான். உனது பயத்தால் தான் நீ பேசுகிறாய். இந்த பன்றியை கொன்றது யான் என்பதை ஒத்துக் கொள்.

என் பெயர் அறிந்தாய்
எனது வலிமையை அறிந்து இருக்க மாட்டாய் வேடனே.
என்னை காண்டீபன்
என்றே அழைப்பார்கள்.

அப்படி என்றால் காண்டீபம் வேண்டாம். மறுக்காது வா
தோலோடு தோல் மோதி என்னோடு போர் புரிய. எனது தோல்கள் தினவெடுக்கிறது என்றான். எனது தோள்களில் மோது. இதில் யார் வெற்றி கொள்கிறார்களோ அவர்களே பன்றியைக் கொன்றதாக எடுத்துக் கொள்வோம் என்றான்.

அர்ச்சுனனுக்கு பொறுத்து கொள்ள முடியவில்லை வேடுவர் கூறும் பொய்யை. உடனே சண்டைக்கு ஒப்புக்கொண்டான். இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து மோத தயாரானார்கள். அர்ச்சுனனின் அழகைக் கண்ட ஈசன் தோளோடு தோளாய் மோதினார். அர்ச்சுனன் கீழே விழாது மோதி நெஞ்சோடு அரவணைத்து கொண்டார்.

இருவரும் நேருக்கு நேர் நின்று தோளோடு தோள் மோதினார்கள். வேடனாக இருந்த ஈசன் ஒரே இடியில் அர்சரசுனனைக் கீழே விழ வைத்து விடுவார். அர்ச்சுனன் கீழே விழும் தருவாயில் கையைப் பிடித்துத் தாங்கி தனது நெஞ்சோடு அணைத்து கொள்கிறார். அருச்சுனனுக்கு இச் செயல் கோபத்தை மூட்டியது. மீண்டும் எழுந்து நெஞ்சோடு நெஞ்சு மோதுகிறார்கள்.

அர்ச்சுனன் கீழே விழ போக இலகுவாக வேடுவன் அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான். உடனே வேடனது கைகளை தட்டி விட்டு மீண்டும் ஓடிவந்து நெஞ்சோடு நெஞ்சு மோதினான் அர்ச்சுனன். தடுமாற்றம் அடைந்தான். மீண்டும் அர்ஜுனன் கீழே விழப் போக, கீழே விழாது அர்ச்சுனனை வேடுவன் தாங்கி பிடித்துக்கொண்டான். அர்ஜுனனுக்கு அதிசயமாக இருந்தது. ஒரு வேடுவன் எத்தனை திறமையானாக
இருக்க முடியுமா.

நான் யார் தெரியுமா? நான் காண்டிபன் என்று கூறிய வார்த்தைகள் அர்ச்சுனனுக்கு நினைவு வந்தது . ஒரு வேடன் இத்தனை பெரிய பராக்கிரம பலசாலியா. இவன் கண்டிப்பாக வேடுவனாக இருக்க முடியாது . வேடுவன் யார் என்பதை அறிய அர்ஜுனன் முயற்சித்தார்.

கிருஷ்ணனை நினைத்து இந்த வேடுவன் யார். இவன் குரு யார் என்று வினவினார். கிருஷ்ணன் உனது கோபத்தை விட்டு பணிவோடு வந்திருப்பது யார் என்று அறி என்றார். உடனே அர்ஜுனன் தன் கோபத்தை விட்டு பணிவோடு தாங்கள் யார் என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன். தாங்களே தங்களே யார் என்று கூற வேண்டும்.

பலமாக சிரித்து தான் வேடுவன் தான் என்றான் . அர்ச்சுனன் இல்லை தாங்கள் வேடுவனாக இருக்க முடியாது. இத்தனை பலசாலியான தங்களையும் தங்கள் குருவை அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார் உடனே வேடனாக இருந்த ஈசன் பலமாக சிரித்துக் கொண்டு தனது உருவத்தை காட்டினார்.

அவனுக்கு பயமாகவும் வியப்பாக இருந்தது இறை தாள் பணிந்தான் ஈசனின் திருவடியில்.

அர்ச்சுனா தவத்தை மெச்சினார். நீ எத்தனை அழகாக தபத்தில் அமர்ந்து இருந்தாய். அமர்ந்த விதத்தின் அழகை கண்டு ரசித்தேன். அதனால் உன்னிடம் திருவிளையாடல் புரிய வந்தேன் . இதோ பசுபதாத்திரம் வாங்கிச் செல் என்றார் பசுபதஸ்திரத்தை தந்து ஒளியாக விரிந்து சென்றார்

சிவம்மா

அழிக்கும் தெய்வம் சிவன் ஏன் தெரியுமா ? | அருணை யோகி சுவாமிகள்

Share this:
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US